பெங்களூர் உலக வர்த்தக மையம்

இந்தியாவிலுள்ள கட்டிடம்

பெங்களூர் உலக வர்த்தக மையம் (World Trade Center Bangalore) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வளாகமாகும். இவ்வளாகம் 2010 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அதன் கட்டுமானத்திற்கான உலக வர்த்தக மைய சங்கத்தின் உரிமத்தைப் பெற்ற பிரிகேடு குழுமம் கட்டிடத்தைக் கட்டியது. இந்தியாவில் அமைந்த இரண்டாவது உலக வர்த்தக மையமாக இது மாறியது மும்பையில் உள்ள உலக வர்த்தக மையம் முதலாவதாக இந்தியாவில்.கட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 128 மீட்டர் உயரம் கொண்ட பெங்களூர் உலக வர்த்தக மையம் தென்னிந்தியாவில் மிக உயர்ந்த வர்த்தக மையக் கட்டிடமாக சிறப்பு பெற்றது.[1] 2015 ஆம் ஆண்டு சென்னையில் டி.சி.எசு கோபுரம் 130 மீட்டர் உயரம் கொண்டதாக கட்டப்பட்டவுடன் இச்சிறப்பு சென்னை கட்டிடத்திற்கு மாறியது.[2] 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இது பெங்களூரில் உயர்ந்த கட்டிடமாக விளங்கியது.[3]

பெங்களூர் உலக வர்த்தக மையம்
World Trade Center Bangalore
பொதுவான தகவல்கள்
வகைவணிகம்
இடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
நிறைவுற்றது2010
உயரம்
கூரை128 m (420 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை32

ஓரியன் பேரங்காடி, கொலம்பிய ஆசியா மருத்துவமனை, செரட்டன் விடுதி, பிரிகேட் பள்ளி மற்றும் பிரிகேட் நுழைவாயில் குடியிருப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த கட்டிடம் "பிரிகேட் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த வளாகத்தின் ஒரு பகுதியாகும்.[4]

சிறீ இராதா கிருட்டிணா கோயில், இந்திய அறிவியல் நிறுவனம், யசுவந்பூர் சந்திப்பு இரயில் நிலையம், சேண்டல் சோப்பு நிறுவனம் ஆகியவை பெங்களூர் உலக வர்த்தக மையத்திற்கு அருகில் உள்ளன.

படக் காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு