பெங்களூர் தமிழர்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பெங்களூர் தமிழர்கள்
தொகுஇரட்டை நகரம்
தொகுகண்டோன்மென்ட் பகுதிகள் தமிழருக்கும் ,பேட்ட என்று முடியும் பகுதிகள் கன்னடருக்கும் ஆங்கிலேய அரசால் பிரித்து கொடுக்கப்பட்டது .அதனால் பெங்களூர் இரட்டை நகரம் என்று அழைக்கப்பட்டது[1] .
சோழர்கால வரலாறு
தொகுபெங்களூர் நகரம் தமிழ் பேசும் சோழர்களுக்கும் கன்னடம் பேசும் சாளுக்கியர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்தது என்பது வரலாற்று புத்தக பதிவின் மூலம் அறிய முடிகின்றது .சோழர்களின் ஆளுகைக்கு முன்பே தமிழ் குடிகள் தற்போதைய பெங்களூரின் பூர்வ குடிகள் என்ற கூற்றும் உண்டு . சோழ மன்னன் இராஜராஜன் மற்றும் அவன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சிவ,வைணவ வழிபாட்டு தளங்கள் அவர்கள் காலத்தை கட்டியம் கூறும் பலருக்கு தெரியாத முக்கிய வரலாற்று ஆவணங்கள் ஆகும் .பெங்களூர் நகர பகுதிகள் ,புற நகர பகுதிகள் ,புறநகர எல்லைக்கு உட்பட்ட பெரும்பான்மையான கிராமங்களிலும் சோழர் கால கலை நயத்துடன் கூடிய சிறிய மற்றும் பெரிய கோவில்களை இன்றும் காணமுடியும்[2] .
சொக்கநாத சுவாமி ஆலய தமிழ் கல்வெட்டு குறிப்புக்கள்
தொகுதற்போது டொம்லூர் அழைக்கப்படும் இடத்தில உள்ள பத்தாம் நூற்றாண்டு சொக்க பெருமாள் கோயில் கல்வெட்டுகள் மூலம் பல அறிய தகவல்கள் அறிய முடிகின்றது[3].
இன்றைய டொம்லூர் அன்றைய தோம்பலூர்
தொகுஇன்று டொம்லுரு என்று அழைக்கப்படும் இடம் சோழர்காலத்தில் தேசிமாணிக்க பட்டினத்தின் தோம்பலூர் என்று இருந்ததாக அறிய முடிகின்றது .தோம்பை என்னும் பூ வழிபாட்டுக்கு பயன்பட்டதன் மூலம் இவ்வாறு அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது[4] பரணிடப்பட்டது 2015-01-04 at the வந்தவழி இயந்திரம் .
இன்றைய இலஹங்கா அன்றைய இளைபாக்க நாடு
தொகுதற்போது இலஹங்க என்று அழைக்கப்படும் இடம் கங்கை கொண்ட சோழனின் ராஜேந்திர சோழவள நாட்டின் இளைபாக்க நாடு என்று அறிய முடிகின்றது .இன்னும் பல கோவில் தகவல்கள் அறிய முடிகின்றது[5] .
திருப்பாவை
தொகுதிருப்பாவை இங்கு பாடப்படும் மாதம் முழுதும் பாடபடுகின்றது[6].
சோமேஸ்வர ஆலயம்
தொகுசோழர் கால மற்றொரு ஆலயம் சோமேஸ்வர ஆலயம் .இது நகரின் மடிவாலா என்னும் பகுதியில் அமைத்துள்ளது பனிரெண்டாம் நூற்றாண்டின் அளவில் இருந்து பதிவு குறிப்புக்கள் கிடைகின்றது .இது கோவில் சுற்று சுவர் முழுவதும் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளால் விரவி காணப்பட்டது . ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த கோவில் புதுமை படுத்தும் பணிகள் மூலம் பெரும்பான்மை அழிக்கபட்டுவிட்டது என்பது அறியமுடிகின்றது .கோவில் அர்த்த மண்டப நுழைவாயில் இடது புறம் இன்று சற்று ஆறுதலாக சில தமிழ் கல்வெட்டுகளை பார்க்க முடிகின்றது .அர்த்த மண்டபமும் கருவறையும் மட்டுமே இன்றும் பழமையை பறைசாற்றி கொண்டிருகின்றன .மற்றவை நவீன புனரமைப்புகளாகும்[7].
இன்றைய தாவரேகரே அன்றைய தாமரை கீரை
தொகுதமிழில் தாமரை கீரை என்றால் தாமரை குளம் என்று பொருள்படும் என்று கன்னட இதிகாச அகதெமி செயலாளர் H.s.கோபால ராவ் மூலம் அறியமுடிகின்றது .தாமரை கீரையே என்று நாம் அழைக்கும் தாவரேகரே என்று அவர் குறிப்பிடுகின்றார்[8] .
இன்றைய பேகூர் அன்றைய வேங்கலூர்
தொகுஇன்றைய பேகூர் அன்றைய வேங்கலூர் என்று கல்வெட்டு குறிப்புக்கள் மூலம் காண முடிகின்றது[9] .
நகரின் பகுதிகளின் பெயர்கள் கன்னட மொழிமாற்றம்
தொகு1960 களில் திரைத்துறை ,செய்தி ,ஊடகத்துறை ,வர்த்தகம் அனைத்திலும் தமிழே கோலோச்சியிருந்தது .இதனால் கன்னட மொழி இயக்கங்களை சேர்ந்தவர்கள் அரசின் துணைகொண்டு நகரின் முழுதும் தெருக்களின் பெயரை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்தார்கள் என்பதை நூல்களின் மூலம் அறியமுடிகின்றது[10].
இன்றைய நிலை
தொகுஇன்றைக்கு கண்டோன்மென்ட் பகுதிகளான பகுதிகள் அல்சூர் ,சிவாஜி நகர் ,பென்சன் டவுன் ,ஆஸ்டின் டவுன் ,ரிச்சர்ட் டவுன் , பிரேசர் டவுன் ,ஆஸ்டின் டவுன் .ரிக்மாண்டு டவுன் .காக்ஸ் டவுன் ,மர்பி டவுன் போன்ற இடங்களில் மிக செறிந்து தமிழர்கள் காணபடுகின்றனர்.மேலும் நகரின் பகுதியிலும் புறநகர் பகுதியிலும் மிக அதிக அளவில் காணமுடிகின்றது.
- ↑ "Bangaluru karaga". THE HINDU இம் மூலத்தில் இருந்து 2008-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080328043207/http://www.hindu.com/2007/04/19/stories/2007041921280500.htm.
- ↑ "Vasundhara Das". Archived from the original on 2013-06-03. பார்க்கப்பட்ட நாள் 2013-07-05.