பெசாவர் பள்ளத்தாக்கு

கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள பள்ளத்தாக்கு

பெசாவர் பள்ளத்தாக்கு ( Valley of Peshawar) வரலாற்று ரீதியாக காந்தாரா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு பரந்த பகுதியாகும். இந்த பள்ளத்தாக்கு 7,176 கிமீ2 (2,771 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் இது காபுல் ஆற்றைக் கடந்து செல்கிறது. இது சராசரியாக 345 மீட்டர்கள் (1,132 அடி) உயரத்தில் உள்ளது.[1] வார்சாக் அணைக்கு அருகில் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெசாவர் நகரத்திலிருந்து பள்ளத்தாக்கு அதன் பெயரைப் பெற்றது. பள்ளத்தாக்கின் மேற்கில் கைபர் கணவாய் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கில் அதிக மக்கள்தொகை கொண்ட ஐந்து நகரங்களில் பெசாவர், மர்தான், சுவாபி, சர்சத்தா மற்றும் நவ்சேரா ஆகியவை அடங்கும் .

பெசாவர் சமவெளி

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்_பள்ளத்தாக்கு&oldid=3774164" இலிருந்து மீள்விக்கப்பட்டது