பெஞ்சமின் தைமரி

பெஞ்சமின் தைமரி (அஸ்ஸாமி : বেঞ্জামিন দৈমাী ; பிறப்பு 28 ஜூலை 2000) இந்தியாவின் அறுபத்தேழாவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடுவர் குழுவின் சிறப்பு விருதினைப் வென்ற முதல் தற்பாலீர்ப்பு கொண்ட ஆணாக அடையாளப்படுத்திக்கொண்ட இந்திய நடிகராவார். ஆவார். [1] 2021 ஆம் ஆண்டில் ஜோனகி பொருவா (மின்மினிகள்) என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விருதைப் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆசிய பால்புதுமையினர் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். [2]

பெஞ்சமின் தைமரி
பிறந்தது 28 ஜூலை 2000



கோரேஸ்வர், பக்சா, அசாம்
தேசியம் இந்தியன்
தொழில்(கள்) நடிகர், ஒப்பனை கலைஞர்
ஆண்டுகள் செயலில் 2019-தற்போது

பெஞ்சமின், அசாம் மாநிலம் பக்சா மாவட்டத்தில் உள்ள கோரேஸ்வர் நகரில் பிறந்துள்ளார். [1] திரைப்படங்களில் நடிப்பதோடு, அசாமிய ஆடை அலங்கார துறையில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பெஞ்சமின் தைமரி அசாமின் கோரேஸ்வரரில் பிறந்துள்ளார், இவரது தற்பாலீர்ப்பு கொண்ட ஆண் என்ற பாலின தேர்வினை, இவரது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தினர் அனைவருமே இவருடன் நின்று, இவரை ஆதரித்துள்ளனர்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. Mohua Das (28 March 2021). "India's first openly gay actor to win a national award on his journey from insults to stardom". https://m.timesofindia.com/home/sunday-times/indias-first-openly-gay-actor-to-win-a-national-award-on-his-journey-from-insults-to-stardom/amp_articleshow/81726210.cms. 
  2. "Fireflies - First-ever film in North East on transgenders released digitally". https://www.sentinelassam.com/amp/guwahati-city/fireflies-first-ever-film-in-north-east-on-transgenders-released-digitally-498089. 
  3. "Benjamin Daimary: 'Northeastern States more tolerant of LGBTQ persons'". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/benjamin-daimary-northeastern-states-more-tolerant-of-lgbtq-persons/article34199335.ece/amp/. 
  4. Thakuria, Megha (19 August 2021). "Meet Benjamin Daimary, India's first openly gay Assamese actor". EastMojo. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_தைமரி&oldid=3677853" இலிருந்து மீள்விக்கப்பட்டது