பெட்ரோவைட்டு

சல்பேட்டு கனிமம்

பெட்ரோவைட்டு (Petrovite) என்பது Na10CaCu2(SO4)8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நுண்ணிய கட்டமைப்பில் ஆக்சிசன் (O), சோடியம் (Na), கந்தகம் (S), கால்சியம் (Ca) மற்றும் தாமிரம் (Cu) ஆகியவற்றின் அணுக்கள் இக்கனிமத்தில் அடங்கியுள்ளன. சோடியம்-அயனி புதுப்பிக்கத்தக்க மின்கலன்களில் நேர்மின்வாய் வேதிப்பொருளாக பயன்படும் சாத்தியம் இக்கனிமத்திற்கு உள்ளது.[1][2]

உருசியாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா பகுதியில் எரிமலை குழம்பின் ஓட்டத்தில் பெட்ரோவைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் 2020 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Newly discovered mineral petrovite could revolutionize batteries". Big Think (in ஆங்கிலம்). 2020-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  2. "Petrovite: Scientists discover a new mineral in Kamchatka". phys.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  3. Filatov, Stanislav K.; Shablinskii, Andrey P.; Krivovichev, Sergey V.; Vergasova, Lidiya P.; Moskaleva, Svetlana V. (October 2020). "Petrovite, Na10CaCu2(SO4)8, a new fumarolic sulfate from the Great Tolbachik fissure eruption, Kamchatka Peninsula, Russia" (in en). Mineralogical Magazine 84 (5): 691–698. doi:10.1180/mgm.2020.53. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-461X. Bibcode: 2020MinM...84..691F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரோவைட்டு&oldid=3794433" இலிருந்து மீள்விக்கப்பட்டது