பெண்கள் பன்னாட்டு இருபது20

பெண்கள் பன்னாட்டு இருபது20 (WT20I) குறைந்த அளவிலான நிறைவுகளைக் கொண்டு பெண்களால் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவமாகும் . பெண்கள் பன்னாட்டு இருபது20 என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையில் விளையாடப்படுவதனைக் குறிக்கிறது. [1] முதல் போட்டி 2004 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது, [2] [3] இந்தப் போட்டி முதல் இருபது -20 சர்வதேச ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. [4] ஐ.சி.சி பெண்கள் உலகக் கிண்ணம் இருபது -20 தொடரானது 2009 இல் முதன்முதலில் நடைபெற்றது.

ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. எனவே, 1 ஜூலை 2018 க்குப் பிறகு இரண்டு சர்வதேச அணிகளுக்கு இடையே விளையாடும் இருபது20 போட்டிகளும் சர்வதேச போட்டிகளாக கருதப்பட்டன. [5]

அங்கத்துவ நாடுகள்தொகு

ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. [6]

சான்றுகள்தொகு

 

  1. "Women's Twenty20 Playing Conditions". International Cricket Council. மூல முகவரியிலிருந்து 24 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது.
  2. Miller, Andrew (6 August 2004). "Revolution at the seaside". Cricinfo.
  3. "Wonder Women – Ten T20I records women own".
  4. English, Peter (17 February 2005). "Ponting leads as Kasprowicz follows". Cricinfo.
  5. "All T20I matches to get international status".
  6. "ICC grants T20I status to all 104 members countries" (26 April 2018).