பெந்தக்கோஸ்து
பெந்தக்கோஸ்து (பண்டைக் கிரேக்கம்: Πεντηκοστή [ἡμέρα], Pentēkostē [hēmera]) என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்[1]) தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது.[2] விண்ணேற்ற விழாவுக்குப் பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
பெந்தக்கோஸ்து தூய ஆவி பெருவிழா | |
---|---|
கடைபிடிப்போர் | கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் |
வகை | Christian |
முக்கியத்துவம் | திருத்தூதர்கள் மீது தூய ஆவியின் வருகை |
கொண்டாட்டங்கள் | திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் முதலிய திருவருட்சாதனங்கள் நிறைவேற்றப்படலாம்.. |
அனுசரிப்புகள் | இறைவேண்டல், திருவிழிப்பு, நோன்பு (விழாவுக்கு ஆயத்தமாக), நவநாள், தியானங்கள், திருப்பலி, மன்றாட்டு மாலை |
நாள் | Easter + 49 days |
2023 இல் நாள் | மே 28 (மேற்கில்) சூன் 4 (கிழக்கில்) |
2024 இல் நாள் | மே 19 (மேற்கில்) சூன் 23 (கிழக்கில்) |
2025 இல் நாள் | சூன் 8 (மேற்கில்) சூன் 8 (கிழக்கில்) |
தொடர்புடையன | உயிர்ப்பு ஞாயிறு |
பெந்தக்கோஸ்து சபை இப்புதிய ஏற்பாட்டு நிகழ்விலிருந்தே தனது பெயரைப் பெறுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில், தூய ஆவியின் வருகை நிகழ்வு செபமாலையின் மகிமை மறைபொருள்களின் மூன்றாம் மறைபொருள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 2:1–31
- ↑ Catholic Encyclopedia, Pentecost (Whitsunday)