பெனின் நகரம்
பெனின் நகரம் (Benin City) என்பது நைஜீரியாவின் தெற்கில் உள்ள எடோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது பெனின் ஆற்றில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) வடக்கிலும், லாகோசில் இருந்து சாலை வழியாக 320 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. பெனின் நகரமானது நைஜீரியாவின் ரப்பர் தொழில் மையமாகவும், எண்ணெய் உற்பத்தி தொழில் பகுதியாகவும் உள்ளது. பெனின் நகரின் பூர்வீககுடி மக்களான எடோ மக்கள் எடோ மொழியையும், பிறர் வேறு மொழிகளைப் பேசுகின்றனர். பெனின் நகர மக்கள் எடோ அல்லது பினி என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நகர மக்கள் ஆப்பிரிக்க கண்டத்திலேயே ஆடம்பரமான ஆடைகளை அணிபவர்களாக உள்ளனர். மேலும் இவர்கள் அணியும் மணிகள், வளையல்கள், கால் வளையங்கள், மற்றும் கயிற்றணிகள் போன்ற அணிகலன்களுக்காக அறியப்படுகின்றனர். [1]
பெனின் நகரம் Benin City | |
---|---|
நகரம் | |
Benin | |
ஆள்கூறுகள்: 6°20′00″N 5°37′20″E / 6.33333°N 5.62222°E | |
Country | நைஜீரியா |
மாநிலம் | எடோ மாநிலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,204 km2 (465 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 14,95,800 |
• தரவரிசை | 4வது |
• அடர்த்தி | 1,200/km2 (3,200/sq mi) |
Climate | Aw |
மேற்கோள்கள்
தொகு- ↑ Benin, City, Nigeria, பரணிடப்பட்டது 25 ஏப்பிரல் 2007 at the வந்தவழி இயந்திரம் The Columbia Encyclopedia, Sixth Edition. 2005 Columbia University Press. Retrieved 18 February 2007