பெனுகொண்டாபுரம் ஏரி
பெனுகொண்டாபுரம் ஏரி என்பது கிருட்டிணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்து உள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 504.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு திறந்து விடப்படும் நீர், அந்த ஏரியின் பாசண வாய்கால் வழியாக பெனுகொண்டாபுரம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியில் 19 அடியில் 140 மில்லியன் கன அடி நீர் தேக்கிவைக்கப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து ஒட்டப்பட்டி, மாதம்பதி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, திப்பம்பட்டி, ஊராட்சிகளில் உள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.[2]
பெனுகொண்டாபுரம் ஏரி | |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 504.8 ஏக்கர் |
அதிகபட்ச ஆழம் | 19 அடி |
நீர்க் கனவளவு | 140 மில்லியன் கன அடி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பெனுகொண்டாபுரம் ஏரியை நிரப்பக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்". செய்தி. தினமணி. 11 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
- ↑ "பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை". செய்தி. தினமணி. 12 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.