பாரூர் ஏரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரிய ஏரி

பாரூர் ஏரி என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள ஒரு ஏரியாகும்.[1] இந்த ஏரியானது கிருட்டிணகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி. இது 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருட்டிணகிரி அணையில் இருந்து வாய்கால் வழியாக வந்தடையும் தண்ணீரானது நெடுங்கல் தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.[2] இந்த ஏரியில் 249 மில்லியன் கன அடி நீர் தேக்கிவைக்கப்படுகிறது. இந்த ஏரியின் கிழக்கு முதன்மைக் கால்வாய் வழியாக 1583.75 ஏக்கர் நிலங்களும், மேற்கு முதன்மைக் கால்வாய் வழியாக 813.67 ஏக்கர் நிலங்களும் என ஆகமொத்தம் 2397.67 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. இதன் மூலம் பாரூர் ஊராட்சி, அரசம்பட்டி ஊராட்சி, பெண்டரஅள்ளி ஊராட்சி, கீழ்குப்பம் ஊராட்சி, கோட்டப்பட்டி ஊராட்சி, ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி, தாதம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகள் பாசனவசதி பெறுகின்றன.[3] இந்த ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய்கள் வழியாக போச்சம்பள்ளி ஏரி, மத்தூர் ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் செல்கிறது.

பாரூர் ஏரி
அமைவிடம்பாரூர், தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆள்கூறுகள்12°18′42″N 78°18′50″E / 12.3117°N 78.3140°E / 12.3117; 78.3140
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு600 ஏக்கர்
சராசரி ஆழம்15.6
நீர்க் கனவளவு249 மில்லியன் கன அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்475 மீட்டர்

மேற்கோள்கள்

தொகு
  1. "கிருஷ்ணகிரி பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு முதல்வர் உத்தரவு". செய்தி. தினகரன். 29 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  2. "பாரூர் பெரிய ஏரியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை". செய்தி. தினமலர். 19 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  3. "பாரூர் ஏரி வரன்டதால் தாமதமாகும் கார் பருவம்? மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்". செய்தி. தினமணி. 6 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூர்_ஏரி&oldid=3780650" இலிருந்து மீள்விக்கப்பட்டது