பென்சைல்
கரிம வேதியியலில் பென்சைல் அல்லது பென்சைல் வேதி வினைக்குழு என்பது ஒரு சேர்மத்தில் C6H5CH2- என்னும் கட்டமைப்பு கொண்ட மூலக்கூற்றுப் பகுதி இருப்பதைக் குறிக்கும். அதாவது ஒரு பென்சீன் வளையத்துடன் ஒரு CH2 சேர்ந்திருக்கும். வேதியியல் வாய்ப்பாட்டிலும் மூலக்கூறைக் காட்டும் படங்களிலும் இதனை "Bn" என்றும் குறிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக பென்சைல் ஆல்ககாலை BnOH என்று சுருக்கமாகக் குறிப்பதுண்டு. இக் குறியீட்டை C6H5C(O)- என்னும் வேதி வினைக்குழுவாகிய பென்சாயில் என்பதன் "Bz" என்னும் குறியீடோடு குழப்பிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.
பென்சைல் என்னும் சொல்லின் பயன்பாடு, கரிம அணு நேரயனியாக்கப்படும் கார்போக்கேசன் வினையாக்கத்தில் ((carbocation))[1] CH2 வேதி வினைக்குழு இணைக்கப்பட்ட பென்சீன் வளையம் பங்குபெறுவதிலும், எதிரயனி (anion) உருவாவதிலும், மின்னூட்டமில்லாத, ஆனால் விரைந்து வேதி வினைப்படும் தனியுறுப்பு (free radical) உருவாக்கத்திலும் வழங்குகின்றது]][2].