பென்சைல் புரோமைடு
பென்சைல் புரோமைடு (Benzyl bromide) என்பது C7H7Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் α-புரோமோதொலுயீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பென்சைல் புரோமைடு புரோமோமெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட ஒரு பென்சீன் வளையத்தால் ஆக்கப்பட்டுள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமோமெத்தில்பென்சீன்
| |||
இனங்காட்டிகள் | |||
100-39-0 | |||
ChEBI | CHEBI:59858 | ||
ChEMBL | ChEMBL1085946 | ||
ChemSpider | 13851576 | ||
IUPHAR/BPS
|
6294 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 7498 | ||
| |||
பண்புகள் | |||
C7H7Br | |||
வாய்ப்பாட்டு எடை | 171.04 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | கூர்மையான காரநெடி | ||
அடர்த்தி | 1.438 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −3.9 °C (25.0 °F; 269.2 K) | ||
கொதிநிலை | 201 °C (394 °F; 474 K) | ||
கரைதிறன் | பென்சீன், CCl4 முதலியவற்றில் கரையும் எத்தனால், ஈதர் போன்றவற்றுடன் கலக்கும். | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5752 | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 70 °C (158 °F; 343 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுதொலுயீனை அறை வெப்பநிலையில் உள்ள காற்றில் பலபடித்தான வினையூக்கியாக மாங்கனீசு(IV) ஆக்சைடைப் பயன்படுத்தி புரோமினேற்றம் செய்வதன் மூலமாக பென்சைல் புரோமைடைத் தயாரிக்கலாம். நிறமற்ற திரவமான இச்சேர்மம் தண்ணீரில் மெல்ல சிதைவடைகிறது.
பயன்கள்
தொகுகரிமத் தொகுப்பு வினைகளில், ஆல்ககால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகியனவற்றை பாதுகாக்கும் தொகுதியான பென்சைல் தொகுதியை அறிமுகப்படுத்த பென்சைல் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.
பென்சைல் புரோமைடு ஒரு வலுவான கண்ணீர் புகை குண்டு ஆகும். தோல் மற்றும் சளிச் சவ்வுகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கொல்லும் தன்மை இல்லாமல் எரிச்சலை மட்டும் உண்டாக்கும் பண்புகளின் காரணமாக, அசல் மற்றும் பயிற்சி சார்ந்த வேதியியல் போர் செயல்களில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
தொகுப்பு முறை தயாரிப்பு
தொகுதனியுறுப்பு ஆலசனேற்ற வினைக்கு பொருத்தமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொலுயீனை புரோமினேற்றம் செய்து தொகுப்பு முறையில் பென்சைல் புரோமைடைத் தயாரிக்கலாம்.
தனிமநிலை புரோமினுக்குப் பதிலாக இவ்வினையில் என்-புரோமோசக்சினிமைடு சேர்மத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 1142