பென்சைல் அயோடைடு
பென்சைல் குளோரைடு மற்றும் அசிட்டோனில் உள்ள சோடியம் அயோடைடு ஆகியவற்றிலிருந்து பிங்கெல்சிடெய
பென்சைல் அயோடைடு (Benzyl iodide) என்பது C7H7I[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அயோடைடுமெத்தில் குழுவும் உள்ளன. இச்சேர்மம் ஒரு ஆல்க்கைல் ஆலைடு மற்றும் அயோடோதொலுயீன்களின் ஒரு கட்டமைப்பு மாற்றியன் என்று கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சைல் அயோடைடு
| |
வேறு பெயர்கள்
பிரைசைட்டு, அயோடோதொலுவோல், α-அயோடோதொலுயீன், பீனைல்மெத்திலயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
620-05-3 | |
ChemSpider | 11601 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12098 |
| |
பண்புகள் | |
C7H7I | |
வாய்ப்பாட்டு எடை | 218.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் அல்லது மெல்ல உருகும் படிகங்கள் |
உருகுநிலை | 24.5 °செல்சியசு |
கொதிநிலை | 218 °C (424 °F; 491 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
தீப்பற்றும் வெப்பநிலை | 86 °C (187 °F; 359 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபென்சைல் குளோரைடு மற்றும் அசிட்டோனில் உள்ள சோடியம் அயோடைடு ஆகியவற்றிலிருந்து பிங்கெல்சிடெய்ன் வினையின் மூலம் பென்சைல் அயோடைடு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுநிறமற்ற மற்றும் மஞ்சள் நிற ஊசிகளாக பென்சைல் அயோடைடு உருவாகிறது. 24.5° செல்சியசு வெப்பநிலை இதன் உருகுநிலையாகும். ஒரு திரவமாக இருக்கும்போது பென்சைல் அயோடைடின் ஒளிவிலகல் எண் 1.6334. மேலும் இதுவொரு வலிமையான கண்ணீர் புகை முகவராகும்[3][4].
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BENZYL IODIDE". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ "Benzyl iodide". NIST. webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ Bauta, William E. "Benzyl Iodide". onlinelibrary.wiley.com. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rb060. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ Fieser, Louis F.; Fieser, Mary (1982). Organische Chemie (in German). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-25075-1.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)