பென்சோடிரையீன்

பென்சோடிரையீன் (Benzotriyne) அல்லது வளைய[6] கார்பன் (cyclo[6]carbon) என்பது ஒரு கற்பிதநிலை வேதிச் சேர்மம் ஆகும். கார்பனின் புறவேற்றுமை வடிவமான இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C6 ஆகும். இம்மூலக்கூறானது ஆறு கார்பன் அணுக்களால் ஆன ஒரு வளையம் ஆகும். ஒவ்வொரு கார்பன் அணுவும் ஒன்று விட்டு ஒன்றாக முப்பிணைப்பு மற்றும் ஒற்றை பிணைப்புகளுடன் அல்லது இரட்டைப் பிணைப்புகளுடன் இணைந்துள்ளன.[1] எனவே இது வளைய[n] கார்பன் குடும்பத்தில் ஒரு சாத்தியமான ஆற்றல்மிகு உறுப்பினராகக் கருதப்படுகிறது.

பென்சோடிரையீன்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/C6/c1-2-4-6-5-3-1 N
    Key: PXCDDPIOUAJVRE-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
  • C1#CC#CC#C1
பண்புகள்
C6
வாய்ப்பாட்டு எடை 72.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பென்சோடிரையீனை தொகுப்பு முறையில் தயாரிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலோக நீரிலிகளை காற்றில்லா வெப்பமூட்டம் முறையில் வினைப்படுத்துதல் ஒரு உதாரணமாகும்.[2] ஆனால் 2011 ஆம் ஆண்டு வரையில் இம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. George A. Adamson and Charles W. Rees (1996). "Towards the total synthesis of cyclo[n]carbons and the generation of cyclo[6]carbon". J. Chem. Soc., Perkin Trans. 1 (13): 1535–1543. doi:10.1039/P19960001535. 
  2. Ellis K. Fields, Seymour Meyerson (October 1966). "Arynes by Pyrolysis of Acid Anhydrides". J. Org. Chem. 31 (10): 3307–3309. doi:10.1021/jo01348a046. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோடிரையீன்&oldid=2038392" இலிருந்து மீள்விக்கப்பட்டது