பென்டாபோரேன்(11)
பென்டாபோரேன்(11) (Pentaborane(11)) என்பது B5H11 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குறிப்பாக நன்றாக ஆராயப்பட்ட பென்டாபோரேன்(9) (B5H9) உடன் ஒப்பிடுகையில் பென்டாபோரேன்(11) தெளிவற்ற ஒரு போரான் ஐதரைடு தொகுதியாகக் கருதப்படுகிறது. நிடோ-பென்டாபோரேன்(9) சேர்மத்தைக் காட்டிலும் இரண்டு ஐதரசன் அணுக்கள் அதிகம் பெற்றுள்ள பென்டாபோரேன்(11) அராக்னோ தொகுதியைச் சேர்ந்த்து என வகைப்படுகிறது[1].
இனங்காட்டிகள் | |
---|---|
18433-84-6 | |
ChemSpider | 34987102 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
B5H11 | |
வாய்ப்பாட்டு எடை | 65.14 g·mol−1 |
உருகுநிலை | −123 °C (−189 °F; 150 K) |
கொதிநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபல போரான் ஐதரைடு தொகுதிகளைப் போல பென்டாபோரேன்(11) சேர்மமும் டைபோரேனை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகிறது. [B4H9] சேர்மத்தை போரான் டிரைபுரோமைடுடன் சேர்த்து சூடுபடுத்தி திட்டமிட்ட ஒரு தயாரிப்பு முறையிலும் இதை தயாரிக்கலாம். லூயிசு அமில மிகுதி ஐதரைடுகள் B5H11 போன்ற சேர்மத்தைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேரமமான நிலையற்ற B4H8, சேர்மத்தைக் கொடுக்கின்றன:[2]
- [B4H9]- + BBr3 → B4H8 + HBBr3-
- 2 B4H8 → B5H11 + "B3H5".
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Toft, Mark A.; Leach, J. B.; Himpsl, Francis L.; Shore, Sheldon G. (1982). "New, Systematic Syntheses of Boron Hydrides via Hydride ion Abstraction Reactions: Preparation of B2H6, B4H10, B5H11, and B10H14". Inorganic Chemistry 21: 1952-7. doi:10.1021/ic00135a048.