பென்னி (யானை)

ஆசிய பெண் யானை

பென்னி (Fanny) என்பது ஓர் ஆசிய யானையாகும். பெண் யனையான இது தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ரோட் தீவின் பாவ்டக்கெட்டில் உள்ள ஒரு சிறிய விலங்குக் காட்சிச்சாலையில் கழித்தது.

வாழ்க்கை வரலாறு

தொகு

ஆசியக் காடுகளில் பிறந்த பென்னி, ரிங்லிங் பிரதர்ஸ் மற்றும் பார்னம் & பெய்லி என்ற சர்க்கஸ் நிறுவனத்திடமிருந்து 1958இல் பாவ்டக்கெட் நகரத்தால் $2,500க்கு வாங்கப்பட்டது. பின்னர் பென்னி நகரத்தின் அடையாளமாக மாறியது. மேலும், பாவ்டக்கெட்டின் சிலேட்டர் பூங்கா விலங்குக் காட்சிசாலையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இருந்தது. பென்னி ஒரு சிறிய கொட்டகையில் காலில் ஒரு இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் 60 மினிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்சியில் பூங்காவின் பராமரிப்புப் பற்றி விமர்சிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டில், நகர சபை மிருகக்காட்சிசாலையை மூடியது. ஆனால் பென்னியின் தலைவிதி குறித்து குடிமக்கள் கவலை தெரிவித்தனர்.[1] ஒரு சில விலங்கு ஆர்வலர் குழுக்களின் ஆதரவுடன் ஜூன் 7,1993 இரவு, டெக்சஸின் மர்சிசனில் உள்ள கிளீவ்லேண்ட் அமோரி பிளாக் பியூட்டி பண்ணைக்கு பென்னி கொண்டு செல்லப்பட்டது.[2][3] பண்ணையில் இருந்தபோது, பென்னிக்கு தாரா என்று மறுபெயரிடப்பட்டது.

பென்னி ஆகஸ்ட் 2003 இல் இறக்கும் வரை பிளாக் பியூட்டி பண்ணையில் வாழ்ந்தது. பண்ணையின் கூற்றுப்படி,யானை இறக்கும்போது அதற்கு 63 வயது ஆகியிருந்தது. அதன் மரணத்தை அறிந்ததும், தி பிராவிடன்ஸ் ஜர்னல் பென்னிக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டது.[4] 2007 ஆம் ஆண்டில், பாவ்டக்கெட் நகரம் ஒரு கண்ணாடியிழை சிற்பத்தை அதற்கு அர்ப்பணித்தது. இதனை அதன் கொட்டகையின் இன்றும் பார்வையாளர்கள் காணலாம்.[5]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னி_(யானை)&oldid=4108017" இலிருந்து மீள்விக்கப்பட்டது