பென்னே கோல் அருவி

கருநாடக அருவி

பென்னே கோல் அருவி (Benne Hole Falls) இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள சிர்சியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும் .[2]

பென்னே கோல் அருவி
Benne Hole Falls
Map
அமைவிடம்

வடகன்னட மாவட்டம்,
கருநாடகம்
ஆள்கூறு14°30′16″N 74°37′28″E / 14.504442°N 74.624403°E / 14.504442; 74.624403
ஏற்றம்335 m (1,099 அடி)
மொத்த உயரம்61 m (200 அடி)[1]
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிஅகனாசினி ஆறு

பென்னே கோல் அருவி மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிமனே மலைப் பகுதியில் பாயும் அகநாசினி ஆற்றின் துணை நதியால் உருவாக்கப்பட்டது. பென்னே கோல் என்பதில் 'பென்னே' என்றால் வெண்ணெய் என்றும் 'கோல்’ என்றால் பெரிய நீரோடை என்றும் பொருள். இது இந்த அருவியின் மென்மையான நீரோட்டத்தைக் குறிக்கிறது. இந்த அருவி சிர்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவியினை காண சிர்சியிலிருந்து காசேஜ் என்ற கிராமத்தை அடைய வேண்டும். காசேஜிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவியின், முதல் 3 கிலோமீட்டர் பயணத் தூரத்தை வாகனம் மூலமும், அடுத்த 2 கிலோ மீட்டர் தூரத்தினை நடந்தும் கடக்கலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bennehole Falls, Sirsi". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  2. "Sirsi Benne hole falls". www.tripuntold.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  3. "Benne Hole Waterfalls - A Tourist's Hub". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னே_கோல்_அருவி&oldid=3785656" இலிருந்து மீள்விக்கப்பட்டது