பென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு

இந்திய அரசியல்வாதி

பென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு (Penmetsa Vishnu Kumar Raju) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். மேலும், 2014இல் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், வடக்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். இவர் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கப்பாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 1970களில் விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தது. இவர், விசாகப்பட்டினத்தில் உள்ள விடி கல்லூரியில் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியலில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.[1]

பென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு
சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிவடக்கு விசாகப்பட்டினம்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2014
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
As of June, 2014

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 82,079 வாக்குகள் பெற்ற இவர் தனது அரசியல் போட்டியாளரான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சொக்ககுல வெங்கட ராவ் என்பவரைவிட 18,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு