பென்-ஹர் (1959 திரைப்படம்)
பென்-ஹர் (Ben-Hur) திரைப்படம் லியூவ் வாலெஸின் நாவலான பென்-ஹர்:எ டேல் ஆப் கிறைஸ்ட் (1880) இன் திரைப்பட வெளியீடாகும். பதினொரு ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் த லோர்ட் ஆப் த ரிங்க்ஸ்:ரிட்டேர்ன் ஆப் த கிங் ஆகிய திரைப்படங்களுடன் இத்திரைப்படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்-ஹர் | |
---|---|
இயக்கம் | வில்லியம் வைலர் |
தயாரிப்பு | சாம் ஷிம்வாலிஸ்ட் வில்லியம் வைலர் |
கதை | கார்ல் டன்ஸ்பேர்க், கோர் விதால் , கிறிஸ்தோபர் ப்றை |
நடிப்பு | சார்ல்ட்டொன் ஹெஸ்டொன், ஜாக் ஹாவ்க்கின்ஸ், ஹயா ஹராரீத், ஸ்டீபன் போய்ட், கியூக் கிரிபித் |
விநியோகம் | எம்.ஜி.எம் |
வெளியீடு | கார்த்திகை 18 1959 |
ஓட்டம் | 212 நிமிடங்கள். |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $15,000,000 |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
யூதா பென் ஹர் யூதனான இவன் ஜெருசலேமின் ஒரு பெரும் பணக்காரனாக விளங்கினான். இவனது சிறுவயது நண்பனான மெசாலா ரோமானியப் போர்த் தளபதியாக பென்ஹரிடம் வந்தான். சந்தித்துக்கொள்ளும் இரு நண்பர்களும் தங்களின் வெவ்வேறு கொள்கைகளினால் பிரிகின்றனர். யூதா தன்னுடைய யூத சமயத்தில் பற்றுள்ளவனாகவும் அதேசமயம் அவனது நண்பனோ உலகத்தினை அடைய வேண்டும் என்ற அவாவுடன் காணப்படுகின்றான். ஒரு சமயம் யூதாவினால் தவறுதலாக தள்ளிவிடப்பட்ட வீட்டின் ஓடு ரோமானிய தலைமைப் பொறுப்பில் இருந்தவனைத் தாக்கிப் பின்னர் அவனது இறப்பிற்கே காரணமாக அமைந்தது. இதனைத் தெரிந்து கொள்ளும் மெசாலா தவறுதலாகத் தான் யூதா அவ்வோட்டினைத் தள்ளியிருப்பான் என்று தெரிந்தும் யூதவைச் சிறையில் அடைக்கின்றான். பின்னர் மெசாலாவை பழி வாங்குவதாகச் சபதம் செய்யும் யூதா பல சிக்கல்களிற்குப்பிறகு கைதியாக்கப்பட்டு அரேபிய நாட்டிற்கு தப்பிச் செல்கின்றான். மேலும் அங்கிருந்த ஒரு அரேபிய மன்னனின் உதவியுடன் குதிரைச் சவாரியில் மெசாலாவை வெற்றி கொண்டு பழி தீர்க்கின்றான்.
விருதுகள்
தொகு- வென்ற விருது: சிறந்த திரைப்படம் — சாம் ஷிம்வாலிஸ்ட்
- வென்ற விருது: சிறந்த நடிகர் — சார்ல்ட்டொன் ஹெஸ்டொன்
- வென்ற விருது: சிறந்த துணை நடிகர் — கியூக் கிரிபித்
- வென்ற விருது: சிறந்த இயக்குனர் — வில்லியம் வைலர்
- வென்ற விருது: சிறந்த திரை அலங்காரம் — எட்வார்ட் சி.கார்பாக்னோ,வில்லியம் அ.ஹர்னிங்,மற்றூம் ஹியூக் ஹண்ட்
- வென்ற விருது: சிறந்த ஒளிப்பதிவு — ரோபேர்ட் சேர்டீஸ்
- வென்ற விருது: சிறந்த உடை அலங்காரம் — எலிஷபெத் ஹாபெண்டன்
- வென்ற விருது: சிறந்த தந்திரக் காட்சி — அ. ஆர்னோல்ட் கிலெஸ்பி(ஒளி), மிலொ பி.லோரி (ஒலி),மற்றும் ரோபேர்ட் மக்டோனல்ட்
- வென்ற விருது: சிறந்த பதிப்பு — ஜான் டி.டன்னிங் மற்றும் ரால்ப் இ.விண்டர்ஸ்
- வென்ற விருது சிறந்த இசையமைப்பு — மைக்லோஸ் ரோசா
- வென்ற விருது : சிறந்த ஒலிப்பதிவு — பிராங்க்லின் மில்டன்
- பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த எழுத்தாக்கம் — கார்ல் துன்பேர்க்
- வென்ற விருது: சிறந்த திரைப்படம் - சாம் ஷிம்பலிஸ்ட்,த்யாரிப்பாளர்
- வென்ற விருது: சிறந்த இயக்குனர் - வில்லியம் வைலர்
- வென்ற விருது: சிறந்த துணை நடிகர் - ஸ்டீபன் போய்ட்
- வென்ற விருது: சிறப்பு விருந்து ஆண்ட்ரூ மார்ட்டன் குதிரை சவாரிக் காட்சிகளை இயக்கியதற்காக
- பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகர் - சார்ல்ட்டொன் ஹெஸ்டொன்
- வென்ற விருது: சிறந்த திரைப்படம் - வில்லியம் வைலர்,இயக்குனர்
- வென்ற விருது: சிறந்த திரைப்படம் -சாம் ஷிம்பலிஸ்ட்,தயாரிப்பாளர்
- வென்ற விருது': சிறந்த இயக்குனர் - வில்லியம் வைலர்
- பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த இசையமைப்பு - மைக்லோஸ் ரோசா