பெம் ஸ்கூல் ஆஃப் எக்லென்ஸ், திருப்பூர்
பெம் ஸ்கூல் ஆஃப் எக்லென்ஸ் (Pem school of excellence) என்பது திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகும். இப்பள்ளி நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைக் கொண்டு 2009 ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2018 ஆண்டு காலகட்டத்தில் 998 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகின்றது. இப்பள்ளியில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியோடு தானியங்கி வானிலை மையம் செயல்பட்டு வருகிறது.
பெம் ஸ்கூல் ஆஃப் எக்லென்ஸ், திருப்பூர் | |
---|---|
அமைவிடம் | |
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | சி.பி.எஸ்.இ / இருபாலர் கல்வி |
தொடக்கம் | 2009 |
பள்ளித் தலைவர் | திருமதி.கெளசல்யா ராஜன்(முதல்வர்) |
இணையம் | http://www.pemschool.org |
பரிசுகளும், அங்கீகாரங்களும்
தொகு- 2012 ஆம் ஆண்டு நடுவண் கல்வி வாரியம் நடத்திய தேசிய கல்விநாள் போட்டியில் இப்பள்ளியின் கட்டுரையான நொய்யல் ஆற்றின் மாசுபாடு குறித்த கட்டுரை முதல் இடத்தைப் பிடித்து, ரூபாய் பத்தாயிரத்தைப் பரிசாகப் பெற்றது.
- 2012 ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நடத்திய போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று ரூபாய் அறுபதாயிரத்தைப் பரிசாக பெற்றது.
- 2015 ஆம் ஆண்டு தேசிய கல்விநாள் போட்டியில் இப்பள்ளியின் கட்டுரையான கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுப்பது எப்படி என்ற கட்டுரை முதல் பரிசைப் பெற்றது பெற்றது.
- விஜய் தொலைக்காட்சி நடத்திய, ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற தமிழ்ச் சொல் விளையாட்டில் இப்பள்ளி மாணவ மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.