பெய்கிங் கண்காட்சி மையம்

பெய்கிங் கண்காட்சி மையம் (Beijing Exhibition Center) (எளிய சீனம்: 北京展览馆; பாரம்பரிய சீனம்: 北京展覽館) சீனாவின் பெய்கிங் நகரில் 1954 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு விரிவான கண்காட்சி அமைவிடம் ஆகும். 1950 களில் பிரபலமாக இருந்த சீன-சோவியத் கட்டிடக்கலை அமைப்பில் இக்கண்காட்சி மையம் கட்டப்பட்டது [1]. பெய்கிங் கண்காட்சி மையத்தில் முன்று பெரிய கண்காட்சி மண்டபங்களும், அருங்காட்சியகங்களும் இடம்பெற்றுள்ளன [1].

பெய்கிங் கண்காட்சி மையம்

1000 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்க மண்டபம் (北京展览馆剧场) இங்கு அமைந்துள்ளது. சீன நாடகங்கள், மேற்கத்திய, சீன இசை நடனங்கள், பாலெட்டு வகை நடனங்கள், இசைக் கச்சேரிகள், ராக் இசை கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு