பெய்ல்ஸ்டீன் சோதனை

பெய்ல்ஸ்டீன் சோதனை (Beilstein test) என்பது கரிம ஆலைடுகளுக்கான ஒரு எளிய தரமான வேதிச்சோதனை ஆகும். இது பிரெட்ரிக் கோன்ராட் பெயில்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது. [1]

தாமிர(II) ஆக்சைடின் பூச்சு ஒன்றை உருவாக்க, ஒரு செப்புக் கம்பி சுத்தம் செய்யப்பட்டு பன்சன் அடுப்பு சுடரில் சூடேற்றப்படுகிறது. பின்னர் அதை சோதனை செய்ய வேண்டிய மாதிரியில் தோய்த்து மீண்டும் ஒரு முறை சுடரில் சூடாக்க வேண்டும். தாமிர ஆலைடு உருவாகியிருந்தால் பச்சை நிறச் சுடரொளிரும். இது தாமிர ஆலைடு உருவாகியிருப்பதை அடையாளம் காண உதவும். இச்சோதனையானது புளோரின்/புளோரைடுகளைக் கண்டறிய உதவவில்லை.

இந்த சோதனையானது இனி வரும் காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படாது. இச்சோதனை பரவலாகப் பயன்படுத்தப்படாததற்கு ஒரு காரணம் யாதெனில், சோதனைப் பொருள் ஒரு பாலிகுளோரோரேனாக இருந்தால், அதிக நச்சுத்தன்மையுள்ள குளோரோ-டையாக்ஸின்களை உருவாக்கக் கூடும். [2]

ஆலைடுக்கான மாற்று ஈரச் சோதனை சோடியம் இணைவு லசைன் சோதனை ஆகும் — இந்த சோதனையானது சோடியம் ஆலைடு உள்ளிட்ட கரிமப் பொருட்களை கனிம உப்புகளாக மாற்றுகிறது. இவ்வாறு கிடைத்த கரிம உப்புகளோடு வெள்ளி நைட்ரேட் கரைசலைச் சேர்ப்பதால், எந்த ஆலைடாக இருந்தாலும் அந்தந்த வெள்ளி ஆலைடாக வீழ்படியச் செய்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. F. Beilstein (1872). "Ueber den Nachweis von Chlor, Brom und Jod in organischen Substanzen". Ber. Dtsch. Chem. Ges. 5 (2): 620–621. doi:10.1002/cber.18720050209. https://zenodo.org/record/1425026. 
  2. Barbara M. Scholz-Böttcher; Müfit Bahadir; Henning Hopf (1992). "The Beilstein Test: An Unintentional Dioxin Source in Analytical and Research Laboratories". Angewandte Chemie International Edition in English 31 (4): 443–444. doi:10.1002/anie.199204431. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்ல்ஸ்டீன்_சோதனை&oldid=3390696" இலிருந்து மீள்விக்கப்பட்டது