பெரம்பூர் பிரமபுரீசுவரர் கோயில்
பெரம்பூர் பிரமபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதரங்கம்பாடி வட்டம் பெரம்பூரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர் பிரம்பில் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் பிரமபுரீசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். முன்பு இக்கோயில் பின்புறம் இருந்ததாகவும், நாளடைவில் சிதலமாகிய நிலையில் இறைவனையும், இறைவியையும் எடுத்துவந்து சுப்பிரமணியர் கோயிலில் வைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். [1]
அமைப்பு
தொகுமூலவராக சுப்பிரமணியர் உள்ளார். வெளிச்சுற்றில் விநாயகர், கந்தபுரீசுவரர், லடசுமி நாராயணப்பெருமாள் உள்ளனர். அடுத்து பிரமபுரீசுவரர், ஆனந்தவல்லி திருமேனிகள் உள்ளன. [1]