பெராக்சோகார்பனேட்டு

வேதியியலில் பெராக்சோகார்பனேட்டு (peroxocarbonate) என்பது இரண்டை இணைதிறனாகக் கொண்டு CO42− என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு எதிர்மின்னயனி ஆகும். இந்த ஆக்சோகார்பன் அயனியில் தனி கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையின்படி இவ்வயனி பெராக்சோகார்பானிக் அமிலத்தின் (HO–CO–O–OH-) எதிர்மின் அயனியாகும்[1][2].

உருகிய இலித்தியம் கார்பனேட்டை மின்னாற்பகுக்கும் போது எதிர் மின்வாயியில் பெராக்சோயிருகார்பனேட்டுடன் (C2O62−) பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனி உண்டாகிறது.[3] செறிவு மிகுந்த ஐதரசன் பெராக்சைடில் (H2O2) −10 °C வெப்பநிலையில் கார்பனீராக்சைடுடன் (CO2) இலித்தியம் ஐதராக்சைடை சேர்த்து இலித்தியம் பெராக்சோகார்பனேட்டு தயாரிக்க முடியும்.[4]

கரிமச் சேர்மங்களில் ஆக்சிசனால் நிகழும் ஆக்சிசனேற்ற வினைகளில், கார்பன் ஈராக்சைடின் தாக்கத்தை விளக்க பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனி ஒரு இடைநிலையாக முன்மொழியப்படுகிறது.[5]

இணைதிறன் ஒன்று பெற்றுள்ள ஐதரசன்பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனிகளின் (H-O-O-CO2) பொட்டாசியம் மற்றும் ருபீடியம் உப்புகளும் உருவாகின்றன.[6][7][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. E. H. Riesenfeld, B. Reinhold (1909), Die Existenz echter Percarbonate und ihre Unterscheidung von Carbonaten mit Krystall-Wasserstoffsuperoxyd. Berichte der deutschen chemischen Gesellschaft, 42(4), 4377–4383, எஆசு:10.1002/cber.19090420428.
  2. E. H. Riesenfeld, W. Mau (1911): Isomere Percarbonate. Berichte der deutschen chemischen Gesellschaft, 44(3), 3595–3605, எஆசு:10.1002/cber.191104403244
  3. Li-Jiang Chen, Chang-Jian Lin, Juan Zuo, Ling-Chun Song, and Chao-Ming Huang (2004), First Spectroscopic Observation of Peroxocarbonate/ Peroxodicarbonate in MoltenCarbonate. J. Physical Chemistry B, volume 108, 7553-7556
  4. T. P. Firsova, V. I. Kvlividze, A. N. Molodkina and T. G. Morozova (1975), Synthesis and some properties of lithium peroxocarbonate. Russian Chemical Bulletin, Volume 24, Number 6, pp. 1318-1319; எஆசு:10.1007/BF00922073
  5. Sang-Eon Park, Jin S. Yoo (2004), New CO2 chemistry: Recent advances in utilizing CO2 as an oxidant and current understanding on its role. Studies in Surface Science and Catalysis, volume 153, pp. 303–314.
  6. Mimoza Gjikaj (2001), Darstellung und strukturelle Charakterisierung neuer Alkali- bzw. Erdalkalimetallperoxide, -hydrogenperoxide, -peroxocarbonate und -peroxohydrate பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம். Doctoral Thesis, University of Köln. 115 pages.
  7. Arnold Adam and Mathias Mehta (1998), KH(O2)CO2.H2O2 : EIN SAUERSTOFFREICHES SALZ DER MONOPEROXOKOHLENSAURE[தொடர்பிழந்த இணைப்பு]. Angew. Chem. volume 110 p. 1457. Cited by Gjikaj.
  8. M. Mehta and A. Adam (1998), Z. Kristallogr., Suppl. Issue 15 p. 53. Cited by Gjikaj.
  9. M. Mehta and A. Adam (1998), Z. Kristallogr., Suppl. Issue 15 p. 46. Cited by Gjikaj.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராக்சோகார்பனேட்டு&oldid=3360646" இலிருந்து மீள்விக்கப்பட்டது