பெராச் நதி
பெராச் நதி ( Berach River ) இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பனாசு நதியின் துணை நதியாகும். உதய்பூர் மாவட்டத்தில் உதய்பூர் நகருக்கு வடகிழக்கில் இந்நதி உற்பத்தியாகிறது. 157 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்நதி சுமார்7502 சதுரகிலோமீட்டர் பரப்பளவுக்கு பாய்கிறது. வடகிழக்கிலிருந்து உதய்பூர் வழியாக சித்தோர்கர் மற்றும் பில்வாரா மாவட்டங்களில் பாய்ந்து பில்வாரா மாவட்டத்திலுள்ள பிகோடு கிராமத்திற்கு அருகே பனாசு நதியுடன் இணைகிறது. சித்தோர்கர் நகரின் கோட்டை நகரம் பெராச் நதியின் கரையில் அமைந்துள்ளது. அகர் நதி, வாக்லி நதி, வாகோன் நதி, காம்பிரி நதி, ஓரை நதி முதலிய நதிகள் பெராச் நதியின் துணை நதிகளாகும். இவை பெராச் நதியின் வலது புறத்தில் இணைகின்றன. உதய்பூர் நகரின் வழியாக பாயும் அயர் நதி பெராச் நதியை உதய் சாகர் நீர்த்தேக்கத்துடன் இணைக்கிறது.
பெராச் நதி | |
ஆறு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | ராசத்தான், உத்தரப் பிரதேசம் |
நகரங்கள் | உதய்பூர் மாவட்டம், மேவார் |
உற்பத்தியாகும் இடம் | ஆராவளி மலைத்தொடர் |
கழிமுகம் | பெராச்-பனாசு சங்கமம் |
துணை நதிகள்
தொகுபனாசு நதியின் தென்பகுதி துணை நதியான பெராச் நதி உதய்பூர் மாவட்ட மலைகளில் உற்பத்தியாகிறது [1].
- அகர் நதி: பெராச் நதியின் வலது புறத்தில் இருக்கும் ஒரு கிளை நதியாகும். இது உதய்பூ மாவட்ட மலைகளில் உற்பத்தியாகி உதய்பூர் நகரத்தின் வழியாகப் பாய்ந்து பிச்சோலா என்ற பிரபலமான ஏரியை உருவாக்குகிறது..
- வாக்லி நதி: பெராச் நதியின் வலது புறத்தில் உள்ள கிளை நதியாகும்.
- வாகோன் நதி: பெராச் நதியின் வலது புறத்தில் உள்ள கிளை நதியாகும்
- காம்பிரி நதி: பெராச் நதியின் வலது புறத்தில் உள்ள கிளை நதியாகும்.
- ஓரை நதி: பெராச் நதியின் வலது புறத்தில் உள்ள கிளை நதியாகும்.