பெரியகாட்டுபாளையம்

பெரியகாட்டுபாளையம் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ள ஒரு கிராமம். ஊரின் நடுவே ஒரு அம்மன் கோவில் உள்ளது. ஊரின் மேற்கே அய்யனார் கோவிலும், கிழக்கே தவசுமூனிஸ்வர் கோவிலும் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் பெரிய கிராமமாக திகழ்ந்த இக்கிராமம் ஒரு பெரிய மழை வெள்ளத்தால் பிரிந்து இன்று மூன்று[சான்று தேவை] கிராமமாக உள்ளது. பெரியகாட்டுபாளையம், நடுகாட்டுபாளையம், மேல்காட்டுபாளையம் ஆகியவையே இம்மூன்று கிராமங்கள் ஆகும். பெரியகாட்டுபாளையம் கிராம பஞ்சாயத்தில் ஒரு அரசு உயர்நிலைபள்ளியும்,ஒரு தனியார் பள்ளியும் உள்ளது. இந்த ஊரின் தொழில் விவசாயம் மற்றும் முந்திரி பயிரிடுதல் ஆகும். மேலும் 95 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இவ்வூரில் உள்ள அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமைகள் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் இத்திருவிழாவில் கலந்துகொள்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியகாட்டுபாளையம்&oldid=2754691" இலிருந்து மீள்விக்கப்பட்டது