பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெரியகுளம் பாலசுப்பிரமணியன் சுவாமி கோயில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பெரியகுளத்தில் வராகநதிக்கரையில் உள்ள ஒரு இந்து சைவக் கோவில் ஆகும். இது பரப்பளவில் பெரிய கோவில் ஆகும். இங்கு மூன்று முக்கிய சன்னதிகள் இருக்கின்றன. நடுவில் கம்பீரமாக இருப்பது இராசேந்திரசோழீஸ்வர் சன்னதி. அங்கே சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவபெருமானுக்கு வலப்புறம் அறம் வளர்த்த நாயகியும் இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய பாலசுப்பிரமணியன் சுவாமியும் வீற்றிருக்கின்றனர். இயற்கைஎழில் மிகுந்த இத்திருத்தலம் அருகிலே ஆண் பெண் மருத மரங்கள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு எதிர் எதிர் திசையில் இருக்கும். இதன் வயது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இந்த இரண்டு மரங்களுக்கு நடுவேதான் வராக நதி செல்கிறது. காசியைப்போல் இந்த இடத்தையும் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது . பெரியகுளம் புதியபேருந்துநிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே நாளில் பல திருமணங்கள் நடைபெறும். அருகில் அழகுநாச்சியம்மன் திருத்தலம் உள்ளது.