பெரிய கால் அருங்காட்சியகம்
பெரிய கால் அருங்காட்சியகம் (Big Foot Museum) இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் கேளிக்கைப் பூங்காவாகும். தெற்கு கோவாவின் சால்செட்டு துணை மாவட்டத்தில் உலூடோலிம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது கோவாவின் கிராமப்புற வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும். [1] கலைஞரான மேந்திர ஆல்வாரேசு அருங்காட்சியகத்தை நிறுவினார். அவராலேயே நிர்வகித்து நடத்தவும்படுகிறது. உலூடோலிம் மார்கோவிற்கு அருகில் உள்ளது.
மூதாதையர்கள் கோவா | |
அமைவிடம் | உலூடோலிம்,சால்செட்டு, கோவா |
---|---|
ஆள்கூற்று | 15°20′23″N 73°59′15″E / 15.3396°N 73.9875°E |
வகை | Private, ethnographic |
முக்கிய வைப்புகள் | சிலைகள், கிராமப்புற வாழ்க்கை |
நிறுவியவர் | மேந்திரா சோசெலினோ அரௌசோ ஆல்வாரெசு |
மேற்பார்வையாளர் | மேந்திரா ஆல்வாரெசு |
உரிமையாளர் | மேந்திரா ஆல்வாரெசு |
அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் | ஆம் |
வலைத்தளம் | http://www.bigfootgoa.com/ |
கருப்பொருள்
தொகுதனியாரால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியக முயற்சியானது கோவா மக்களின் கிராமத்தை சிறிய சித்திரமாக மீண்டும் உருவாக்குகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடந்த காலத்தில் உள்ளூர் கிராமப்புற வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இது சித்தரிக்க முயல்கிறது. [2] அருங்காட்சியகம் திறந்தவெளி அமைப்பில் அமைந்துள்ளது.
சித்தரிப்புகள்
தொகுமூதாதையர் கோவா அருங்காட்சியகத்தில், ஈட்டியைக் காட்டும் போர்த்துகீசிய சிப்பாய் ஒருவரின் சிலை, ஒரு மீனவர், மற்றும் பிற கிராமவாசிகள், மீன் விற்கும் பெண்கள், நெல் வயல்களில் வேலை செய்த விவசாயிகள் மற்றும் பிற தொழில்கள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளது. "போர்த்துகீசிய வழக்கறிஞர் அரௌசோ ஆல்வாரெசு என்பவருக்கு சொந்தமான காசா ஆல்வாரெசு மாளிகை அருகில் உள்ளது. இங்கு பழங்கால பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பழங்கால மரச்சாமான்கள், வழக்கமான மேலோடு சன்னல்கள், உயர் கூரை மற்றும் கனமான செதுக்கப்பட்ட மர தளவாடங்கள் உள்ளன. இங்குள்ள சாப்பாட்டு அறையில் குறைந்தது 30 பேர் அமரலாம். [3]
அமைவிடம்
தொகுமார்கோவ் உலூடோலிமிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பொதுப் பேருந்து, கார், வாடகை வாகனம் அல்லது இரு சக்கர மோட்டார் சைக்கிள் மூலமாக இங்கு செல்ல முடியும்.
இதன் வளாகத்தில் ஒரு கலைக்கூடம், கைவினைப் பொருட்கள் விற்பனை மையம், உணவகம், இரப்பர் தோட்டங்கள் மற்றும் மசாலா முற்றம் ஆகியவை உள்ளன. வளாகத்தில் உள்ள 'வீடுகள்' பாரம்பரிய கோவா கிராம ஆக்கிரமிப்புகளை மீண்டும் உருவாக்குகின்றன. உள்ளூர் கைவினைஞர்கள், இசைப் பள்ளி, கிராம சந்தை, மதுபானக் கடைகள் மற்றும் உள்ளூர் ஆல்ககால் வடித்தல் தொழில் ஆகியவற்றை சித்தரிக்கின்றன.
பெயரின் தோற்றம்
தொகுமூதாதையர்களின் புராணக்கதை என விவரிக்கப்படுவதிலிருந்து இதன் பெயர் வந்தது. [4]
அங்கீகாரம்
தொகுஉங்களுக்குத் தெரியாத கோவாவில் இது பட்டியலிடப்பட்டுள்ளது: கடற்கரைகளுக்கு அப்பால் செல்லும் 10 இனிய பயண ரகசியங்களிலும் [5] கோவாவில் உள்ள ஐந்து அற்புதமான அருங்காட்சியகங்களிளும் பெரியகால் அருங்காட்சியகம் பட்டியலிடப்பட்டுள்ளது. [6]
உலகப் புகழ்பெற்ற அனைத்து இடதுசாரி’ பிரபலங்களுக்குமான அருங்காட்சியகமும் இதன் வளாகத்தில் உள்ளது. [7]
புதுப்பிப்புகள்
தொகுஜூன் 2020 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்த அருங்காட்சியகம், கோவாவில் உள்ள மற்ற அருங்காட்சியகங்களுடன் இணைந்து, கோவிட்-19 தொற்றுநோயால் இதன் செயல்பாடுகள் கடினமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rao, Bindu Gopal (2019-02-25). "Lively Loutolim". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "Big Foot Museum in Goa - GoaTourismTravels". goatourismtravels.com. Archived from the original on 2020-12-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
- ↑ "Travelling suitcase: A hidden gem in south Goa". The Indian Express (in ஆங்கிலம்). 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "- Big Foot Goa". www.bigfootgoa.com. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
- ↑ "The Goa You Don't Know: 10 Offbeat Travel Secrets That Go Beyond Beaches". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "Here are 5 awesome museums in Goa that you need to check out". ItsGoa (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "A museum for all 'lefty' luminaries". The Times of India (in ஆங்கிலம்). August 13, 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "Hit hard by lockdown, Goa museums await Government nod to reopen". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-06-16. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.