பெரிய பச்சைப்பெருங்கிளி
பெரிய பச்சை நிற மக்காவ் கிளிகள் இயற்கை வரம்பில் மிகப்பெரிய கிளிகளாகும். மக்காவ் இனங்களில் இவை இரண்டாவது மிகப்பெரிய இனமாகும். (சிவப்பு மற்றும் பச்சை நிற மக்காவைக் காட்டிலும் மற்ற பெரிய மெக்காவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குட்டையான வால் கொண்டவை) இவ்வுலகில் மூன்றாவது எடை மிகுந்த கிளியினம் இவையாகும். இந்த இனங்கள் சராசரியாக 85-90 செ.மீ. (33.5-35.5 அங்குலம்) மற்றும் எடை 1.3 கிலோ (2.9 எல்பி) கொண்டவை. இவை முக்கியமாக பச்சை நிறம் கொண்ட உடல் பகுதி, சிவப்பு நிறமுள்ள முன் நெற்றி மற்றும் வெளிர் நீல நிற பின்புறம் மற்றும் மேல் இறகுகள் உடைய வால்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வால்பகுதி சிவந்த பழுப்பு நிறமும் வெளிர் ஊதா நிறமும் கொண்டது. இவற்றின் தோல் பகுதிகளில் சிறிய கருப்பு வண்ண இறகுகள் உள்ளன. இவை வளர்ந்த பெண்கிளிகளில் சிவப்பு நிறமாக இருக்கும். இவை இராணுவ மக்காவ் போன்ற தோற்றம் கொண்ட காரணத்தால் இரண்டும் பறக்கும் போது குழப்பம் ஏற்படும்.
Great green macaw | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ara |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AraA. ambiguus
|
இருசொற் பெயரீடு | |
Ara ambiguus (Bechstein, 1811) | |
Subspecies | |
Ara ambiguus ambiguus | |
A. ambiguus distribution range | |
வேறு பெயர்கள் | |
|
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International (2020). "Ara ambiguus". IUCN Red List of Threatened Species 2020: e.T22685553A172908289. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22685553A172908289.en. https://www.iucnredlist.org/species/22685553/172908289. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.