ககனகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை
(பெரிய மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ககனகிரி அல்லது பெரியமலை (Gaganagarh அல்லது periyamalai) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலிருக்கும் வேலம்பட்டி என்னும் ஊரிலிருந்து வடக்கே அமைந்துள்ள மலைக் கோட்டையாகும். கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது உயரமானதாகும். இம்மலைக்கோட்டை 3435 அடி உயரமுடையது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும் உள்ளன.[1] இந்த மலையில் இயறைகையான பல சுனைகளும் குளங்களும் உள்ளன.

ககனகிரி அல்லது பெரியமலை.

மலை உச்சியில் வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் பெருமாள் திருமகள், மண்கமளுடன் வடதிசை நோக்கி காட்சியளிக்கிறார். பெரிய மலையின் நடுவில் இரண்டு தீர்த்தங்களும், திம்மராய சுவாமி, இராமர், இலட்சுமி நாராயண சுவாமி, அரங்கநாதர், இலட்சுமி தேவி, முருகன் போன்றோரின் கோயில்கள் உள்ளன. அரங்கன் கோயிலைத் தொட்டாற்போல் வற்றாத தீர்த்தம் சிங்கத்தின் வாயின் வழியாக விழுகிறது. மலையின் உச்சிமுதல் அடிவரை ஐந்து குளங்கள் உள்ளன.[2]

இம்மலையில் உள்ள பெருமாளை இப்பகுதி மக்கள் பலரும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மக்கள் விரதமிருந்து பெருமாளை வழிபடுவர். புரட்டாசி சினிக்கிழமைகளில் இக்கோயிலில் குழந்தைகள் முதல் பொியவா்கள் வரை தலை முடியை காணிக்கையாக அளித்தும், உண்டியலில் காணி்க்கை இட்டும் வழிபடுகின்றனர். மலை அடிவாரத்தில் அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 306
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 106-108. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககனகிரி&oldid=3483235" இலிருந்து மீள்விக்கப்பட்டது