பெருங்கணினி
பெருமுகக் கணிப்பொறி அல்லது பெருங்கணினி (Mainframe computer) என்பது கணக்கெடுப்புகள், தொழில் மற்றும் நுகர்வோர் புள்ளி விபரங்கள்,நிறுவன வளம் திட்டமிடல், பரிவர்த்தனை செயல்பாடுகள் போன்ற பல அதிக அளவிலான தகவல்களை செயல்படுத்துவதற்கும், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் அதி முக்கியமான மென் பயன்பாடுகளை செயல்படுத்துவதற்கு மற்றும் பராமரிப்பதற்கும் உதவும் பெரிய வகை கணினி ஆகும். முதலில் ஆதி கணினிகளின் மையச் செயற்பகுதி (central processing unit) மற்றும் நினைவகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறைகள் இப்பெயரால் அழைக்கப்பட்டன.[1][2] பின்னர் இப்பெயர் உயர் தர வணிக இயந்திரங்களிலிருந்து சாதாரண ஆற்றல் குறைந்த இயந்திரங்களை வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தபட்டது.[3] பெரிய அளவிலான கணினி கட்டமைப்புகள் 1960களில் நிறுவப்பட்டிருந்த போதிலும், அவை வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
விரிவுரை
தொகுநவீன பெருங்கணினி வடிவமைப்பு பொதுவாக ஒரு பணி கணக்கீட்டு வேகத்தை (MIPS rate or FLOPS) விட பின்வரும் காரணிகளால் வரையறுக்கப்படுகிறது
- மிகுதியான உள்ளமைப்பு பொறியியல் மற்றும் அதனால் கிடைக்கும் அதி நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு
- விரிவான உள்ளீடு-வெளியீடு வசதிகள்
- பழைய மென்பொருளுடன் மிகக்கச்சிதமான பின்னோக்கிய இணக்கம்
- மகத்தான செயலாக்கத்திற்கான உயர் வன்பொருள் மற்றும் கணணி பயன்பாட்டு (Computational Utilization) விகிதங்கள்
இவற்றின் உயர் நிலைப்பு தன்மை மற்றும் நம்பகத்தன்மை, இந்த இயந்திரங்களை நெடு நேரம் தடையில்லாமல் இயங்குவதற்கு வழிவகை செய்துள்ளது
மென்பொருள் மேம்பாடுகள் செய்வதற்கு வழக்கமாக இயக்குதளத்தையோ அல்லது அதன் பகுதிகளையோ நிர்மாணிக்க வேண்டி வரும். வேலைப்பளு பகிர்தலுக்கு துணை செய்யும் 'ஐபிஎம்'மின் Z/இத (Z/OS) மற்றும் இணை சிக்கலமைப்பு(Parallel Sysplex), அல்லது 'யுனிஸிஸ்'(Unisys)சின் எக்ஸ்பிசில் (XPCL) போன்ற மெய் நிகராக்கும் வசதிகள் மூலமாக மட்டுமே இச்செயலை சீர்குலைவில்லாமல் செய்ய இயலும். பெருங்கணினிகள் குறிப்பாக செயல்படா நேரம் விலையுயர்ந்ததாகவும் பேரழிவை விளைவிப்பதாகவும் உள்ள மென் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுவதால் அதிக கிடைக்கும் தன்மையுடதாக (availability) இருக்கின்றன. அவற்றின் நெடுங்கால பயன்பாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும். நம்பகத்தன்மை (Reliability),கிடைக்கும் தன்மை மற்றும் சரிபார்க்க இயலும் தன்மை (serviceability) (நகிச-RAS) ஆகியவை பெருங்கணினியை வரையருக்கும் பண்புகளாக உள்ளன.
உசாத்துணை
தொகு- ↑ "mainframe, n". Oxford English Dictionary (on-line).
- ↑ Ebbers, Mike; O’Brien, W.; Ogden, B. (2006). "Introduction to the New Mainframe: z/OS Basics" (PDF). IBM International Technical Support Organization. Archived from the original (PDF) on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2007-06-01.
- ↑ Beach, Thomas E. "Computer Concepts and Terminology: Types of Computers". பார்க்கப்பட்ட நாள் November 17, 2012.
வெளி இணைப்புக்கள்
தொகு- IBM eServer zSeries mainframe servers
- Univac 9400, a mainframe from the 1960s, still in use in a German computer museum
- Lectures in the History of Computing: Mainframes
- Articles and Tutorials at Mainframes360.com: Mainframes
- Mainframe Tutorials and Forum at mainframewizard.com: Mainframes