பெருபாலம் கடற்கரை
பெருபாலம் கடற்கரை (Perupalem Beach) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் கடற்கரை சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.[1][2]
பெருபாலம் கடற்கரை | |
---|---|
வகை | கடற்கரை |
அமைவிடம் | பெருபாலம் , மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 16°20′26″N 81°36′06″E / 16.3404314°N 81.6017932°E |
அமைவிடம்
தொகுஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள நரசபுரம் நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பெரும்பாலம் கடற்கரை அமைந்துள்ளது.
கடற்கரை திருவிழா
தொகுபெருபாலம் கடற்கரையில் இரண்டு நாட்கள் நடைபெறும் கடற்கரை திருவிழாவில் மொகல்தூர் கடற்கரை மற்றும் அதை ஒட்டிய மண்டலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.[3]
பெரும்பாலம் கடற்கரை திருவிழா முதன்முதலில் மாநில அரசால் இங்கு நடத்தப்பட்டது. மொகல்தூர் மண்டலத்தில் உள்ள பெரும்பாலம் கிராமம் இந்த நிகழ்ச்சிக்காக அலங்கரிக்கப்பட்டு பெண்கள் பாரம்பரிய மற்றும் ஆந்திர பாரம்பரிய உணவு வகைகளைக் கண்காட்சியில் வைக்கின்றனர்.<ref group="பெரு">
அனுகல்
தொகுபெரும்பாலம் கடற்கரைக்குச் செல்ல பேருந்து அல்லது தொடருந்து மூலம் நர்சாபூருக்குச் சென்று அங்கிருந்து பயணிக்கலாம். ஆந்திராவின் பல முக்கிய நகரங்களுடன் நரசபுரம் தொடர்பு கொண்டுள்ளது. நரசாபுரத்திலிருந்து வாடகை வண்டிகள் மூலம் பெரும்பாலம் கடற்கரைக்குச் செல்லலாம்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sujath Varma, P (23 February 2014). "For a beach well within your reach". Vijayawada. http://www.thehindu.com/news/cities/Vijayawada/for-a-beach-well-within-your-reach/article5718867.ece. பார்த்த நாள்: 15 February 2016.
- ↑ "APTDC proposes to develop eight beach resorts in state". Hyderabad. 23 May 2013. http://www.newindianexpress.com/cities/hyderabad/APTDC-proposes-to-develop-eight-beach-resorts-in-state/2013/05/23/article1601966.ece. பார்த்த நாள்: 15 February 2016.
- ↑ admin (2020-12-26). "Perupalem Beach - Resort, Church, Festival, Timings, Location, Photos - Vihara Darshani". www.viharadarshani.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.