பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில்
பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருப்பணி தற்போது (மே 2015) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து தென்கிழக்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1] ரெட்டவயல் என்னுமிடத்தின் அருகே இக்கோயில் உள்ளது. [2]
மூலவர் சிறப்பு
தொகுஇக்கோயிலில் மூலவர் விடங்க வடிவாக உள்ளார். ’விடங்கன்’ என்றால் சிற்பியால் உளி கொண்டு செதுக்கப்படாத வடிவமாகும். உளிபடாத மூர்த்தியை சுயம்புலிங்க மூர்த்தி என்றழைப்பர். இக்கோயிலில் மூலவராய் உள்ள சோமநாத சுவாமி தாமரைத்தண்டாக இருந்து இறைவனாக மாறியவர் என்பது தொன் நம்பிக்கை.[1] திருப்பணியின் காரணமாக கோயிலின் சிற்பங்கள் தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. கோயில் வளாகத்தின் பின்புறம் ஒரு விநாயகர் கோயிலும், பிடாரி கோயிலும் உள்ளன.
மற்றொரு சிறப்பு
தொகுஇக்கோயிலின் தென் பிரகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென்னங்கன்றை பயிரிட நட்டுவைத்தனர். கன்று வளரத்தொடங்கியது. பின்னர், சில மாதங்களில் அதே இடத்தில் இன்னொரு கன்று பூமிக்கு மேல் துளிர்த்து வளரத் தொடங்கியது. சில மாதங்கள் கடந்ததும் மேலும் ஒரு தென்னங்கன்று அதே இடத்தில் வளரத்தொடங்கியது. இவ்வாறாக அங்கு ஒரே இடத்தில் ஐந்து தென்னை மரங்கள் ஒரே இடத்தில் வளர்கின்றன.[1]
கல்வெட்டு
தொகுஇக்கோயிலில், தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளித்த செய்தியைக் கொண்ட மராத்திய மொழி மற்றும் மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. [3] [4]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 சந்திர தோஷம் நீக்கும் சோமநாதசுவாமி, தினத்தந்தி வெள்ளி மலர், 10.4.2015
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ பெருமகளூரில் மோடி கல்வெட்டு கண்டெடுப்பு, தினமணி, 21 ஏப்ரல் 2019
- ↑ Maratha-period inscription found, The Hindu, 21 April 2019