பெருமிதப் பேரணி
பெருமிதப் பேரணிகள் (Pride parade) அல்லது வானவில் பேரணி என்பது அகனள், அகனன், ஈரர், திருனர் மற்றும் பாலிருமை முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் (LGBTQ) ஆகியோரின் உரிமைகளை வலியுறுத்தியும் ஆதரவு தெரிவித்தும் அவர்கள் பண்பாட்டையும் பெருமையையும் கொண்டாடும் நிகழ்வுகள் ஆகும். பெரும்பாலான வானவில் பேரணிகள் ஆண்டு தோறும் நாட்டின் பெருநகரங்களில் நடைபெறுகின்றன. பெரும்பாலும், இவை ஸ்டோன்வால் கலவரங்களை நினைவுகூறும் வண்ணம் சூன் மாதத்தில் ஒழுங்குசெய்யப்படுகின்றன.[1]
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் வானவில் பேரணிகள் நடைபெறுகின்றன. புதுச்சேரியிலும் வானவில் பேரணிகள் நடந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wythe, Bianca (June 9, 2014). "How the Pride Parade Became Tradition". PBS. பார்க்கப்பட்ட நாள் July 9, 2014.