பெருவியன் மிளகு
பெருவியன் மிளகு மரம் (Schinus molle) 50 அடி உயரமும், 3 அடி சுற்றளவும் கொண்டது. கிளைகள் தொங்கிக் கொண்டு இருக்கும். இலைகள் கூட்டிலையாக 25 இருக்கும். இதனுடைய பெண் மரத்தில் மிகச் சிறிய வெளுத்த மஞ்சள் சிறப்பூக்கள் உள்ளன. இதனுடைய கனிகள் மிகச் சிறியதாக, உருண்டையாக 6 மி.மீ. அளவிற்கு உள்ளது. இது சிவந்த ரோஸ் நிறத்தில் உள்ளது. பார்ப்பதற்கு மிளகு போலவே உள்ளது. இவை கிளைகளில் கொத்து கொத்தாக தொங்கும். இவற்றிலிருந்து உண்மையான கருப்பு மிளகிலிருந்து வரும் வாசனையே வருகிறது. மேலும் மிளகின் அதிகப்படியான வாசனை மரத்தின் அனைத்துப் பாகத்திலிருந்தும் கிடைக்கிறது. மேலும் இலையை தேய்த்தாலும் மிளகு வாசனையே ஆவியாகக் கூடிய எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெயும் அதிகப்படியான மிளகு வாசனையே வருகிறது. மிளகிற்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். இம்மரத்தின் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இம்மரத்தின் தாயகம் பெரு நாடு ஆகும். இச்சாதியில் 17 இனங்கள் உள்ளன.
பெருவியன் மிளகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Schinus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SchinusS. molle
|
இருசொற் பெயரீடு | |
Schinus molle L.[1][2] |
மேற்கோள்
தொகு- ↑
- USDA, ARS, GRIN. பெருவியன் மிளகு in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 2008-07-06.
- ↑ Linnaeus, C. (1753), Species Plantarum 1: 388
வெளி இணைப்புகள்
தொகு- Schinus molle List of Chemicals (Dr. Duke's) பரணிடப்பட்டது 2004-11-21 at the வந்தவழி இயந்திரம்
- Celtnet Spice Guide entry for Pink Peppercorns பரணிடப்பட்டது 2015-04-03 at the வந்தவழி இயந்திரம்