பெரோ-ஆக்டினோலைட்டு
பெரோ-ஆக்டினோலைட்டு (Ferro-actinolite) என்பது பெரசு இரும்பு மிகுந்த கனிமமாகும். இனோசிலிக்கேட்டு குழு கனிமங்கள் வகையின் இரட்டைச் சங்கிலி சுண்ணாம்பு ஆம்பிபோல் துணைக்குழுவில் உள்ள ஆக்டினோலைட்டு-டிரெமோலைட்டு தொடர் திண்மக் கரைசல் வரிசையின் கடைசி உறுப்பினர் பெரோ ஆக்டினோலைட்டு ஆகும்.
இத்தொடரிலுள்ள அனைத்து கனிமங்களும் ஒற்றைச் சரிவச்சு படிகத் திட்டத்தில் படிகமாகியுள்ளன. கீழ்கண்ட வாய்ப்பாடுகளின் ஒப்பீடு நன்கு அறியப்பட்ட உறுப்பினர்கள் ஒரே வரிசைத் தொடருக்குள் எவ்வாறு இடம்பிடித்துள்ளன என்பதை தெரிவிக்கிறது.
டிரெமோலைட்டு: ☐Ca2(Mg5.0-4.5Fe2+0.0-0.5)Si8O22(OH)2
ஆக்டினோலைட்டு: ☐Ca2(Mg4.5-2.5Fe2+0.5-2.5)Si8O22(OH)2
பெரோ-ஆக்டினோலைட்டு: ☐Ca2(Mg2.5-0.0Fe2+2.5-5.0)Si8O22(OH)2
சில பதிலி நேர்மின் அயனிகள் Ca, Mg, அல்லது Fe அயனிகளை இடப்பெயர்ச்சி செய்யலாம். பொட்டாசியம் (K), அலுமினியம் (Al), மாங்கனீசு (Mn), தைட்டானியம் (Ti), மற்றும் குரோமியம் (Cr) உள்ளிட்டவை அந்த பதிலி அயனிகளாகும். புளோரின் எதிர்மின் அயனி பகுதியாக ஐதராக்சில் அயனி (OH) இடப்பெயர்ச்சி செய்யலாம்.
இயற்பியல் பண்புகள்
தொகுஆக்டினோலைட்டுகளைக் காட்டிலும் பெரோ ஆக்டினோலைட்டு பட்டகங்கள் நிறத்தில் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளன. இரும்பு உள்ளடக்கம் அதிகமாக இருப்பது இதற்கு காரணமாகும். ஆனால் மெல்லிய துண்டுகளில் அல்லது விளிம்பைச் சுற்றியுள்ள இடங்களில் அடர் பச்சை நிறம் காணப்படுகிறது. மோவின் அளவு கோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 5-6 என்ற அளவுடன் வெள்ளைக் கீற்றுகளுடன் நொறுங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பெரோ-ஆக்டினோலைட்டின் ஒளி விலகல் எண்ணும் ஆக்டினோலைட்டைக் காட்டிலும் அதிகமாகும்.