பெர்க்கிலியம்(IV) ஆக்சைடு
பெர்க்கிலியம்(IV) ஆக்சைடு (Berkelium(IV) oxide) BkO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியம் ஈராக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1] மெல்ல மெல்ல இச்சேர்மம் சிதைவடைந்து கலிபோர்னியம்(IV) ஆக்சைடு சேர்மமாக மாறுகிறது. 600 °செலசியசு வெப்பநிலையில் ஐதரசனுடன் சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் இதை பெர்க்கிலியம்(III) ஆக்சைடாக மாற்ற இயலும்.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BkO2 | |
வாய்ப்பாட்டு எடை | 278.9988 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு நிறத் திண்மம் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
புறவெளித் தொகுதி | Fm3m |
Lattice constant | a = 5.334 A°, b = 5.334 A°, c = 5.334 A° |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பெர்க்கிலியம்(IV) சல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அமெரிசியம் டையாக்சைடு கியூரியம்(IV) ஆக்சைடு கலிபோர்னியம்(IV) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 2BkO2 + H2 → Bk2O3 + H2O
தயாரிப்பு
தொகுபெர்க்கிலியம் உலோகத்தை 1200 பாகை செல்சியசு வெப்பநிலையில் எரித்தால் பெர்க்கிலியம்(IV) ஆக்சைடு உருவாகிறது. பெர்க்கிலியம்(III) ஆக்சைடுடன் ஆக்சிசனை சேர்த்து 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் பெர்க்கிலியம்(IV) ஆக்சைடை தயாரிக்கலாம்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ U.S Atomic Energy Commission. Division of Plans and Reports (1972). Fundamental Nuclear Energy Research (in English). the University of Michigan. p. 100.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Peterson, J. (1967). "Crystal structures and lattice parameters of the compounds of berkelium I. Berkelium dioxide and cubic berkelium sesquioxide". Inorganic and Nuclear Chemistry Letters 3 (9): 327–336. doi:10.1016/0020-1650(67)80037-0. https://escholarship.org/uc/item/5mv047vq.