பெர்சியஸ் (விண்மீன் குழாம்)
பெர்சியஸ் (Perseus) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். இப்பெயர் கிரேக்க தொன்மை நாயகனான பெர்சியஸின் காரணமாக பெயரிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் நூற்றாண்டின் வானியல் வல்லுநர் டாலமி அவர்கள் பட்டியலிட்ட 48 விண்மீன் குழாங்களில் ஒன்றாகும். உலகளாவிய வானியல் ஒன்றியத்தின் 88 தற்கால விண்மீன் குழாங்களுள் ஒன்றாகவும் உள்ளது.