பெர்டிகுலா
பெர்டிகுலா | |
---|---|
பெர்டிகுலா ஆசியாடிகா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
துணைக்குடும்பம்: | பெர்டிசினே
|
பேரினம்: | |
இனம்: | பெ. ஆசியாடிகா
|
இருசொற் பெயரீடு | |
பெர்டிகுலா ஆசியாடிகா கோட்ஜ்சன், 1837 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பெர்டிகுலா (Perdicula) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள காடைகளின் பேரினமாகும். இதில் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை கூட்டாகப் புதர்க் காடைகள் என்று அழைக்கப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
தொகுபெர்டிகுலா என்ற பொதுவான பெயர் பெரிடிக்சு என்ற பேரின நவீன பெயராகும். இது நவீன இலத்தீன் மொழியில் சிறியது என்ற பொருளைத் தரும். மேலும் சிறிய காடை என்று பொருள்.[1] பெர்டிகுலா மற்றும் பெர்டிக்சு இரண்டு வகைகளுக்கும் நெருங்கிய தொடர்பில்லை. பெர்டிக்சு பாசியானினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள பாசியானினி இனக்குழுவினைச் சேர்ந்தது. அதே சமயம் பெர்டிகுலா பாவோனினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள கோடர்னிசினி இனக்குழுவினைச் சேர்ந்தது.
இந்த பேரினமானது பின்வரும் நான்கு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் |
---|---|---|
பெர்டிகுலா ஆசியட்டிகா | புதர்க்காடை | |
பெர்டிகுலா அர்கூண்டா | மலைக் காடை | |
பெர்டிகுலா எரித்ரோரிஞ்சா | வண்ணந்தீட்டியக் காடை | |
பெர்டிகுலா மணிபூரென்சிசு | மணிப்பூர் புதர் காடை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Jobling, James A. (2010). Helm Dictionary of Scientific Bird Names. Christopher Helm. pp. 297, 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-3326-2.