பெர்ட்டிராண்டு மைகு பீக்

பிரித்தானிய வானியலாளர்

பெர்ட்டிராண்டு மைகு பீக் (Bertrand Meigh Peek) (1891 – 1965) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வானியல் முதுவரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.

பெர்ட்டிராண்டு மைகு பீக்

பீக் இங்கிலாந்து, பர்மிங்காமில் இருந்த சோலிகுல் வான்காணகத்தைப் பயன்படுத்தி, 1923 முதல் 1947 வரை பல நோக்கிடுகளை எடுத்தார். இவை குறிப்புகளுடன், அரசு வனியல் கழக மாதவாரி அறிக்கைகள்]] எனும் இதழில் வெளியிடப்பட்டன. இந்த வான்காணகம் 1947 இல் பிரிக்கப்பட்டது.[1] இவரது நோக்கிடௌகள் இலக்காகப் பெரிதும் வியாழன் கோளே அமைந்தது. இவர்பிரித்தானிய வானியல் கழக செவ்வாய்ப் பிரிவின் இயக்குநராக 1930 முதல் 1931 வரையிலும் காரிக்கோள் பிரிவின் இயக்குநராக 1934 முதல் 1935 வரையிலும் இருந்தார். மீண்டும் இவர் 1934 முதல் 1949 வரை வியாழன் பிரிவின் இயக்குநராகத் தொடர்ந்தார். இவர் 1938 முதல் 1940 வரை பிரித்தானிய வானியல் கழகத்தின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர்1946 இலிருந்து 1955 வரையில் ஆண்சிறாருக்கான சைமன் இலாங்டன் இலக்கணப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தார். இங்கு இவர் வானியல் கழகத்தியும் நடத்தினார். உடல்ந்லமின்மையல் ஓய்வு பெற்ற இவர் 1965 இல் இறந்தர். Iஇவர் பிரித்தானிய வானியல் கழக வியாழன் பிரிவு நோக்கீடுகளை பயன்படுத்தி 1958 இல் வியாழன் கோள் எனும் நூலை வெளியிட்டார்.இதன் திருத்திய பதிப்பு 1981 இல் வெளியிடப்பட்டது. பிரித்தானிய வானியல் கழகத்துக்கு இவரது மகனாகிய பிறையான் தந்த குறிப்புகளின்படி,[2]:

  • இவர் மும்முறை கேம்பிரிட்ஜ் கணிதவியல் பரிசை வென்றுள்ளார்;
  • இவர் ஒரு பூப்பந்தாட்ட வல்லுனர்;
  • இவர் அங்கிலோ-சோவியத் சதுரங்கப் போட்டி குழுவுறுப்பினர்;
  • இவர் இரண்டாம் உலகப் போரில் கம்ப்சயர் ப்டையணியின் படைமேலர்
  • இவர் ஒரு படகுப் பந்தயக்காரர்;
  • இவர் ஓர் இசைத் தொகுப்பாளர்;
  • இவர் தொடக்கநிலை வானொலித் தொழில்நுட்பத்தில் புலமை சான்றவர்.

பீக் நிலாக் குழிப்பள்ளம் இவரது நினைவகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Peek, B. M., 1948, "Report of his observatory (Solihull)", Monthly Notices of the Royal Astronomical Society, Vol. 108, p. 79
  2. Directors of the Mars Section பரணிடப்பட்டது 2006-05-28 at the வந்தவழி இயந்திரம், BAA

வெளி இணைப்புகள்

தொகு