பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர்
பெர்தா ஜின்டிக்ஸ் தாகர் (Bertha Gyndykes Dkhar) ஒரு பார்வையற்ற இந்திய கல்வியாளர் ஆவார். காசி மொழியில் பிரெயில் எழுத்து முறையை கண்டுபிடித்தவர் என்று அறியப்படுகிறார்.[1] [2] 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]
பெர்தா ஜிண்டிக்ஸ் தாகர் | |
---|---|
பிறப்பு | சில்லாங், மேகாலயா, இந்தியா |
பணி | கல்வியாளார் |
விருதுகள் | பத்மசிறீ குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது |
வலைத்தளம் | |
Official web site |
சுயசரிதை
தொகுஇவர், மேகாலயாவின் சில்லாங்கில் [4] பார்வைக் குறைபாடுள்ள குழந்தையாகப் பிறந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் போது பார்வையை முழுமையாக இழந்தார். இதனால் தனது படிப்பைக் கைவிட வேண்டியிருந்தது. வாழ வழியில்லாமல், சந்தையில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தினார். [2] இயலாமையைக் கடப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து, பிரெயில் குறியீட்டில் ஆராய்ச்சி செய்து மேகாலயாவின் உள்ளூர் மொழியான காசியில் குறியீட்டை வடிவமைத்தார்.[1]
பார்வையற்ற குழந்தைகளுக்காக பெத்தானி சங்கத்தால் நடத்தப்படும் ஜோதி ஸ்ரோட் பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார்.[5] 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது பெற்றார். [3] 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து குழந்தைகள் நலனுக்கான தேசிய விருதையும் பெற்றார்.[6]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Tehelka". News report. Tehelka. 13 August 2011. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ 2.0 2.1 "Woman for Society". Web Profile. Woman for Society. 2014. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ 3.0 3.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Highbeam". Highbeam. 13 August 2011. Archived from the original on 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ "Jyoti Sroat". Jyoti Sroat. 2014. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ "Title unknown". தி இந்து. 10 August 2000. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
வெளி இணைப்புகள்
தொகு- "Padma Shri Investiture Ceremony". News photo. Economic Times. 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.