பெர்போரைட்டு
பெர்போரைட்டு (Berborite) என்பது Be2(BO3)(OH,F)·(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதை பெரிலியம் போரேட்டு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். வெள்ளைக் கீற்றுகளுடன் பளப்பளப்புடன் ஒளி புகக்கூடிய நிறமற்றதொரு கனிமமாக இது காணப்படுகிறது. 3 என்ற மோவின் அளவுகோல் [2] கடினத்தன்மை மதிப்பைக் கொண்ட பெர்போரைட்டு கதிரியக்கத்தன்மை இல்லாத கனிமமாகவும் உள்ளது. பொருளறிவியல் வகைப்பாட்டில் பெர்போரைட்டு 1தி, 2தி, 2எச் வகை பல்வகை பல்லுருவங்களாக தோன்றுகிறது
பெர்போரைட்டு Berborite | |
---|---|
நேட்ரோலைட்டின் மீது பெர்போரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | போரேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Be2(BO3)(OH,F)•H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | 1T பல்வகை பல்லுரு: முக்கோணம் 2H பல்வகை பல்லுரு: அறுகோணப் படிகம் 2T பல்வகை பல்லுரு: முக்கோணம் |
இரட்டைப் படிகமுறல் | பலபாகங்கள் |
பிளப்பு | {0001} சரிபிளவு |
முறிவு | சமமற்றது – பிளவில்லாத தட்டை மேற்பரப்பு சமமற்ற வகை விரிசல். |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
அடர்த்தி | 2.2 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.580 nε = 1.485 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.095 |
புறவூதா ஒளிர்தல் | none |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு உருசியாவின் கரேலியா குடியரசின் லதோகா பிரதேசத்திலுள்ள லுபிக்கோ சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. நார்வே நாட்டின் வெசுட்டுபோல்டு மாகாணத்திலுள்ள லார்விக் நகரிலும், தெலிமார்க் மாகாணத்தின் போர்சுகிரண் நகர லாங்கசுண்ட்சுபோர்டு நகராட்சியிலும் கிடைப்பதாக அறியப்படுகிறது [1][3]. உருசியாவில் செர்பென்டைன் வகை பாறைகள் உருமாறி தோலமைட்டாக கரடுமுரடான பரல்களுடன் தங்குதன், இசுட்ரோன்சியம், பெரிலியம், போரான் தனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. நார்வே நாட்டிலுள்ள பாறைக் குழிகளில் நேட்ரோலைட்டு, தாம்சோனைட்டுடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat.org http://www.mindat.org/min-629.html
- ↑ 2.0 2.1 2.2 Webmineral.com http://www.webmineral.com/data/Berborite.shtml
- ↑ 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
- ↑ Mineralienatlas