பெர்ரியிட்டு

சிலிசைடு கனிமம்

பெர்ரியிட்டு (Perryite) என்பது (Ni,Fe)8(Si,P)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். நிக்கல் சிலிசைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சிலிக்கான் நிறைந்த விண்கற்களில் பெர்ரியிட்டு கனிமம் காணப்படுகிறது. இந்த வகை கனிமம் வாசிங்டனில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[1] அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள ஆர்சு கிரீக்கு பகுதியில் 1963 ஆம் ஆண்டில் பிரடரிக்சன் மற்றும் விக்மேன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[2] அமெரிக்க விண்கல் சேகரிப்பாளர் சுடூவர்ட்டு ஆப்மேன் பெர்ரியின் நினைவாக கனிமத்திற்கு பெர்ரியிட்டு எனப் பெயரிடப்பட்டது. பெர்ரியிட்டு கனிமமானது பொதுவாக திரொலைட்டு கனிமம் எனப்படும் இரும்பு சல்பைடுடன் கலந்து காணப்படுகிறது. இது உலோக என்சுடாடைட்டு காண்ட்ரைட்டு விண்கற்களின் ஒரு சிறிய அங்கமாகும்.[3]

பெர்ரியிட்டு
Perryite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Ni,Fe)8(Si,P)3
இனங்காணல்
நிறம்"பாலேடு மஞ்சள்"[1]
விகுவுத் தன்மைகம்பியாக நீட்டலாம்[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரியிட்டு கனிமத்தை PRY என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Perryite (Ni, Fe)8(Si, P)3 (PDF), Mineral Data Publishing
  2. Reed, SJB (6 June 1968). "Perryite in the Kota-Kota and South Oman enstatite chondrites". Mineralogical Magazine and Journal of the Mineralogical Society 36 (282): 850–854. doi:10.1180/minmag.1968.036.282.13. Bibcode: 1968MinM...36..850R. https://citeseerx.ist.psu.edu/document?repid=rep1&type=pdf&doi=9727b2bd4e25844836dc5d332e0299a0d68f87cb. 
  3. Britvin, Sergey N.; Krivovichev, Sergey V. et al. (2021-12-29). "Perryite, (Ni,Fe)16PSi5, from the Mount Egerton aubrite: the first natural P-Si-ordered phosphide-silicide". Journal of Geosciences 66 (4): 189–198. doi:10.3190/jgeosci.331. பன்னாட்டுத் தர தொடர் எண்:1802-6222. http://www.jgeosci.org/content/jgeosci.331. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரியிட்டு&oldid=4136481" இலிருந்து மீள்விக்கப்பட்டது