பெர்ரைட்டு
பெர்ரைட்டு (Berryite) என்பது Pb3(Ag,Cu)5Bi7S16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு பட்டகங்களாக சாம்பல் நிறம் முதல் நீலம் கலந்த சாம்பல் நிறம் வரையிலான நிறங்களில் இக்கனிமம் கிடைக்கிறது. ஒளிபுகாத உலோகத் தன்மை கொண்ட பெர்ரைட்டு மோவின் அளவுகோலில் 3.5 என்ற கடினத்தன்மை அளவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ஒப்படர்த்தி 6.7 ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரைடு கனிமத்தை Bry[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பெர்ரைட்டு Berryite | |
---|---|
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் இருந்து கிடைத்த அரிதான Pb-Ag சல்பைடு கருப்பு ஊசி போன்ற படிகங்கள் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Cu3Ag2Pb3Bi7S16 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | திரும்ப திரும்ப |
பிளப்பு | தெளிவற்ற/தனித்துவமற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | உலோகத் தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 6.7 |
அடர்த்தி | 6.7 கிராம்.செ.மீ3 (அளக்கப்பட்டது) |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம் |
எக்சு கதிர் விளிம்பு வளைவு சோதனையின் மூலம் முதன் முதலில் பெர்ரைட்டு 1965 ஆம் ஆண்டு லியோனார்டு கேசுகோயின் பெர்ரியால் (1914-1982) கண்டறியப்பட்டது. கொலராடோ நாட்டின் பார்க் மற்றும் சான் யுவான் மாகாணங்களில் பெர்ரைட்டு அதிக அளவில் கிடைக்கிறது. கொலராடோவில் சல்பைடைக் கொண்டுள்ள குவார்ட்சு விளிம்புப் பகுதிகளிலும் கிரீன்லாந்தில் சிடரைட்டு மிகுந்த கிரையோலைட்டிலும் பெர்ரைட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.