பெர்ரோதைட்டானியம்
பெர்ரோதைட்டானியம் (Ferrotitanium) என்பது இரும்பு மற்றும் தைட்டானியம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் பெர்ரோகலப்புலோகம் ஆகும். 10-20 மற்றும் 45-75% தைட்டானியமும் சில சமயங்களில் சிறிதளவு கார்பனும் இரும்புடன் சேர்க்கப்பட்டு பெர்ரோதைட்டானியம் கலப்புலோகம் தயாரிக்கப்படுகிறது. எஃகு தயாரித்தலில் இரும்பையும் எஃக்கையும் அலசும் முகவராக பெர்ரோதைட்டானியம் பயன்படுத்தப்படுகிறது. தைட்டானியம் கந்தகம், கார்பன், நைட்ரசன் ஆகியவற்றுடன் தீவிரமாக வினைபுரிந்து கரையாத சேர்மங்களை உருவாக்கி கசடிலிருந்து அவற்றை நீக்கப் பயன்படுகிறது. சில சமயங்களில் கந்தக நீக்கியாகவும், ஆக்சிசன் நீக்கியாகவும், நைட்ரசன் நீக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. எஃகு தயாரித்தலில் தைட்டானியத்தைச் சேர்க்கும் போது நுண்மணி அமைப்பிலான உலோகம் கிடைக்கிறது. நுண்துளை அமைப்பிலான பெர்ரோதைட்டானியம் மற்றும் தைட்டானிய எச்சங்கள் ஆகியவற்றை இரும்புடன் சேர்த்து தூண்டு மின்னுலையில் உருக்கி பெர்ரோதைட்டானியம் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது [1]. பெர்ரோதைட்டானியம் தூளை வானவெடிக்கலை பகுதிப்பொருட்களிலும் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rudolf Fichte (2005), "Ferroalloys", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a10_305