பெலகேயா பெதரோவ்னா சாய்ன்

கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 19
1112 பொலோனியா ஆகத்து 15, 1928
1113 கத்யா ஆகத்து 15, 1928
1120 கன்னோனியா செப்டம்பர் 11, 1928
1121 நடாசா செப்டம்பர் 11, 1928
1369 ஆசுதானினா ஆகத்து 27, 1935
1387 காமா ஆகத்து 27, 1935
1390 அபாசுதுமானி அக்தோபர் 3, 1935
1475 யால்டா செப்டம்பர் 21, 1935
1610 மிர்னயா செப்டம்பர் 11, 1928
1648 சாய்னா செப்டம்பர் 5, 1935
1654 பொயேவா அக்தோபர் 8, 1931
1735 இதா செப்டம்பர் 10, 1948
1954 குகர்கின் ஆகத்து 15, 1952
1987 கப்ளான் செப்டம்பர் 11, 1952
2108 ஆட்டொ சுக்கிமிடு அக்தோபர் 4, 1948
2445 பிளாழ்கோ அக்தோபர் 3, 1935
3080 மாயிசெயீவ் அக்தோபர் 3, 1935
3958 கொமந்தந்தோவ் அக்தோபர் 10, 1953
5533 பகுரோவ் செப்டம்பர் 21, 1935

பெலகேயா பெதரோவ்னா சாய்ன் (Pelageya Fedorovna Shajn) அல்லது சன்னிகோவா எனப்படுபவர் (Пелагея Фёдоровна Шайн) (1894 – ஆகத்து 27, 1956) ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். ஆங்கிலத்தில் சாய்ன் எனவும் கண்டுபிடிப்புகளில் பி. எஃப். சாய்ன் எனவும் சிலவேளைகளில் சுசாய்ன் எனவும் முதல்பெயர் பெலகேஜா எனவும் வழங்குகிறது.[1]

இவர்1894 இல் ஓர் உழவர் குடும்பத்தில் பேர்ம் ஆளுநரகத்தில் உள்ள சோலிகாம்சுகி மாவட்ட்த்தில் ஆசுதானின் எனும் ஊரில் பிறந்தார்.[2] இவர் உருசிய வானியலாளராகிய கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன் (Григорий Абрамович Шайн) அவர்களின்மனைவியாவார். இவரது இளமகவைப் பெயர் சன்னிகோவா (Санникова).[3][4]

அலைவுநேர வால்வெள்ளி 61P/சாய்ன்–சுசல்டாச் எனும் வால்வெள்ளியை இவர் இணையாகக் கண்டுபிடித்தார். என்றாலும் அலைவுறா வால்வெள்ளி C/1925 F1 (சாய்ன்-கோமாசு சோலா) அல்லது வால்வெள்ளி 1925 VI அல்லது வால்வெள்ளி 1925a இவரால் அல்ல, இவரது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் பல குறுங்கோள்களையும் 140 அளவில் மாறும் விண்மீன்களையும் கண்டுபிடித்தார்.[5]

குறுங்கோள் 1190 பெலகேயா, அதைக் கண்டுபிடித்த சோவியத் ஒன்றியத்தின் உருசிய வானியலாளரான கிரிகொரி நியூய்மினால் பெலகேயா சாய்ன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names: Prepared on Behalf of Commission 20 Under the Auspices of the International Astronomical Union. Springer. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-00238-3. 
  2. Кукаркин, Б. В., தொகுப்பாசிரியர் (1958). Переменные Звезды (Variable Star) (Академия наук СССР (Academy of Sciences of the USSR)) 11: 321–323. 
  3. "Shain [Shayn, Shajn, Grigory Abramovich"]. Biographical Encyclopedia of Astronomers. New York, NY: Springer. 2007. பக். 1046. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-30400-7. https://books.google.com/books?id=t-BF1CHkc50C&lpg=PA1046&dq=Pelageya%20Shajn&pg=PA1046#v=onepage&q&f=false. 
  4. "Санникова-Шайн Пелагея Федоровна, астроном (Sannikova-Shajn, Pelageya Fedorovna, astronomer)" (in Russian). Пермская крае (Perm Krai). Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Dobronravin, P. P. (1950) (in Russian). Krymskaia astrofizicheskaia observatoriia (Crimean Astrophysical Observatory). University of California. பக். 46. 

மேலும் படிக்க தொகு

  • Мишланова Л. Самостоянье (Mishlanova L. Samostoyaniya): "Очерки о людях науки и культуры Пермского края. Пермь" (Essays of men on science and culture of Perm Krai). Пушка, 2006. 320 с.: ил., Из содерж.: Планета Пелагея (Planet Pelagia). С. 27-33.: фот.