பெலிக்சு புளோபெர்கர்
ஆத்திரிய நாட்டு சதுரங்க வீரர்
பெலிக்சு புளோபெர்கர் (Felix Blohberger) ஆசுத்திரியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார்.[1][2] 2002 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் இருபதாம் தேதியன்று இவர் வியன்னா நகரத்தில் பிறந்தார். பிடே அமைப்பு 2022 ஆம் ஆண்டு பெலிக்சு புளோபெர்கருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது.[3] முன்னதாக இவர் 2016 ஆம் ஆண்டில் பிடே மாசுட்டர் பட்டத்தையும் 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.[3]
பெலிக்சு புளோபெர்கர் Felix Blohberger | |
---|---|
2019 ஆம் ஆண்டில் பெலிக்சு புளோபெர்கர் | |
நாடு | ஆசுத்திரியா |
பிறப்பு | ஆகத்து 20, 2002 வியன்னா, ஆசுத்திரியா |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2022) |
பிடே தரவுகோள் | 2503 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2522 (சூன் 2023) |
முக்கியப் போட்டிகள்
தொகுபோட்டியின் பெயர் | ஆண்டு | எலோ | புள்ளிகள் |
---|---|---|---|
வியன்னா கிராண்டுமாசுட்டர் போட்டி 2021 (வியன்னா, ஆத்திரியா) | 2021 | 2490 | 6.5 |
பிராகா பன்னாட்டு திறந்தநிலை போட்டி (பிராகா, செக்குடியரசு) | 2021 | 2475 | 7.0 |
28 ஆவது இ ஒய் திறந்தநிலை போட்டி 16 வயதுக்குட்பட்டோர் 2018 (இரிகா) | 2018 | 2427 | 2.5 |
2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் பெலிக்சு புளோபெர்கர் விளையாடினார். முதல் சுற்றில் கிரீசு நாட்டைச் சேர்ந்த திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசுடன் மோதினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Felix Blohberger chess games - 365Chess.com". www.365chess.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ "The chess games of Felix Blohberger". www.chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ 3.0 3.1 "Blohberger, Felix". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.