பெல்லாரி ஆடு
பெல்லாரி ஆடு (Bellary sheep) என்பது செம்மறி ஆட்டின் வகைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவில் கருநாடக மாநிலம் பெல்லாரி மற்றும் தாவணகெரே மாவட்டங்கள் மற்றும் ஹாவேரி மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.[1] மேலும் இது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர், கர்னூல் மாவட்டத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுபெல்லாரி செம்மறி ஆடுகள் நடுத்தர அளவிலானவை. வெள்ளை நிற உடல் வெள்ளை நிறத்துடன் கருப்பு கலந்த பல்வேறு கலவை நிறத்தில் காணப்படும்.[2] பெரும்பாலான ஆட்டுக் கிடாக்களுக்குக் கொம்புகள் இருக்கும். அதே சமயம் செம்மறி ஆடுகள் கொம்புகளின்றிக் காணப்படும். இதன் காதுகள் நடுத்தர அளவில், தட்டையானதாக, தொங்கிக் கொண்டிருக்கும்.[3] இது மெல்லிய, குட்டையான வாலினைக் கொண்டது. தோலில் காணப்படும் உரோமங்கள் கரடுமுரடானவை. வயிறு மற்றும் கால்களில் உரோமங்கள் இல்லை. ஒரு வருட வயதுடைய பெல்லாரி ஆடு 26 கிலோ வரை எடையுடையதாகக் காணப்படும்.[4] பொதுவாக ஒரே ஒரு குட்டியை மட்டும் ஈனும் தன்மையுடையது. அரிதாக இரண்டு குட்டிகள் வரை ஈனும். இது கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளின் கரிசல் மண் மற்றும் விவசாயக் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றத் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sheep genetic resources of India - Bellary" (PDF). nbagr.icar.gov.in. 2005. பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
- ↑ "Sheep and Goat Breeds of India. R.M. Acharya. FAO Animal Health and Production Paper No. 30. Rome. 190 p. 1982" (in en). Animal Genetic Resources Information 2: 45–46. April 1984. doi:10.1017/S1014233900003771. பன்னாட்டுத் தர தொடர் எண்:1014-2339. https://www.cambridge.org/core/product/identifier/S1014233900003771/type/journal_article.
- ↑ "Livestock of the World". பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
- ↑ "Breed Profiles". பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
- ↑ Jain, A. Kulkarni, V.S., Govindaiah, M.G., Sadana, D.K., Aswathnarayan, T., Pandey, A.K., Kumar, D., Sharma, R. and Signh, G. 2005. Sheep Genetic Resources of India Bellary. ICAR Monograph, National Bureau of Animal Genetic Resources, Karnal, India. Pp24