பேகலோர்

தாமிரம், ஆர்சனிக், ஆண்டிமனி ஆகியவற்றின் அணைவு சல்போவுப்புக் கனிமம்

பேகலோர் (Fahlore) என்பது தெனண்டைட்டு எனப்படும் (Cu6[Cu4(Fe,Zn)2]As4S13 சேர்மத்திற்கும் நான்முகி வடிவமான (Cu6[Cu4(Fe,Zn)2]Sb4S13 சேர்மத்தின் தொடருக்கும் இடைப்பட்ட ஒரு கனிமமாகும். பேகலோர் கனிமம் தாமிரம், ஆர்சனிக், ஆண்டிமனி ஆகியவற்றின் சல்போவுப்பு அணைவைக் கொண்டிருக்கும். வெளிர் என்ற பொருளுக்குரிய செருமன் சொல்லில் இருந்து பேகல் என்ற பெயர் வந்தது. கனிமம் வெளிர் சாம்பல் முதல் அடர் கருப்பு வரையிலான நிறங்களில் காணப்படுகிறது. [1][2]

செருமனியின் நாசாவு நகரம் தில்லன்பர்க்கில் இருந்து கிடைத்த குவார்ட்சுடன் பேகலோர் கனிமம். இந்த துண்டு செருமனியின் பான் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் அருங்காட்சியகத்தில் இருந்து வந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lüschen, Hans (1979). Die Namen der Steine : das Mineralreich im Spiegel der Sprache : mit einem Wörterbuch, enthaltend über 1300 Namen von Mineralien, Gesteinen, Edelsteinen, Fabel- und Zaubersteinen (2., neubearb. und erw. Aufl ed.). Thun: Ott. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3722562651. இணையக் கணினி நூலக மைய எண் 6356236.
  2. "Tennantite-Tetrahedrite Series: Tennantite-Tetrahedrite Series mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகலோர்&oldid=4130656" இலிருந்து மீள்விக்கப்பட்டது