பேசகபதம் (சிற்பநூல்)

இந்தியச் சிற்ப மரபில் பேசகபதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. இது நான்கு பதங்களைத் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், கிழக்குப் பக்கம் ஆதித்தனுக்கும் (சூரியன்), தெற்குப் பக்கம் யமனுக்கும், மேற்குப் பக்கம் வருணனுக்கும், வடக்குப் பக்கம் சந்திரனுக்கும் உரியது என மானசாரம் கூறுகின்றது. இவர்களைவிடச் சிவன் வடகிழக்குப் பகுதிக்கும், அக்கினி தென்கிழக்குக்கும், காற்றுக் கடவுளான பவனன் தென்மேற்குக்கும், ஆகாயத்துக்கு உரிய கடவுள் ககனன் வடமேற்குக்கும் உரிய கடவுளர் எனவும் அந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.[1]

இந்த அமைப்பு வீடுகளுக்கும், வணக்கத் தலங்கள், பொதுக் குளியல் இடங்கள் போன்றவற்றுக்கான கட்டிடங்களுக்கும் பொருத்தமானது எனச் சிற்பநூல்கள் கூறுகின்றன.[2]

குறிப்புக்கள்

தொகு
  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 25.
  2. Acharya, Prasanna Kumar., 2010. பக். 25.

உசாத்துணைகள்

தொகு
  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசகபதம்_(சிற்பநூல்)&oldid=1603567" இலிருந்து மீள்விக்கப்பட்டது